Saturday, May 15, 2010

அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...






அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில்
அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்!
நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! என்
தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய்!


நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக
மழலை தேன்சிந்துபாடி வந்தாய்!பாழும் தூரம்தான்
என்செய்யும்? பாசத்தைக் கூட்டி விட்டால்
!வாழ்வாய் என்நெஞ்சத்தில்! வாழ்த்துகிறேன்!


உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!

மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!

வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!

Friday, May 14, 2010

அன்புத் தம்பி சிவாவுக்கு வாழ்த்துக்கள்!!!





வெள்ளிவிழா நாயகனே!
உனக்காக
வாழ்த்தொன்று
வரைந்துவிட நினைக்கையிலே
தவம்புரிந்த சொற்கள் எல்லாம்
என்னை எடு என்னை எடு
என்று வந்து வரிசையிலே
கைகட்டி நின்றதென்ன!!

அத்தனையும் எடுத்தாள
ஈகரையில் பக்கங்களோ
மொத்தம் இல்லை..

சங்கம் வைத்து
தமிழ் வளரத்த
தென்னவனை எண்ணுகிறேன்
தங்கத்தமிழ் மன்னவனாய்
கோலங்கொண்டு
கண்ணுக்குள்ளே
நீவந்து மின்னுகிறாய்!

இமயத்தில்
புலி பொறித்த
முன்னவனை எண்ணிடினும்
இணையத்தில்
தமிழ் பொறித்த
ஈகரையின் நாயகனாம்
நீ வந்து எக்காளமிடுகின்றாய்!!

வடமலையின்
கல் கொணர்ந்து
கண்ணகிக்கு சிலை வடித்த
வில்லவனை நினைத்தாலும்
சொல் கொண்டு
கலை வடித்த
கன்னித்தமிழ் காவலனாய்
களிப்பூட்டி சிரிக்கின்றாய்!!

தம்பி! உன்
உதட்டுமொழி கேட்டதில்லை
கற்பனைதான் என்றாலும்
நித்தமும் நீ
எழுத்துக்களில் ஓசையேற்றி
காதோரம் பேசுகிறாய்
அன்பு மொழி ஆயிரந்தான்!!

மூச்சுக்கு மூன்று முறை
அக்கா என்றாய்!
பச்சை குருதியிலே
பாசத்தை ஏற்றிவிட்டாய்
வெற்று பேச்சுக்கு சொல்வதில்லை
முற்றும் மூச்சடங்கும்
முன் உந்தன்
முழுமதியம் முகங்காண
ஏங்குகின்றேன்!!!

வாழ்த்து என்ற பயணத்தைத்
தான் தொடர்ந்தேன்..
பாதியிலே பாதை மாறி
பாசக் கதையதனை
பகர்ந்து விட்டேன்
மீண்டும் சுய நினைவு
வந்ததனால்
வாழ்த்துகின்றேன்
வையப்புகழ் பெற்றிடு நீ...

Saturday, May 1, 2010

திராவிட விருட்சம்..!





ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளைப் பாடிடவா?


இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?


கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?


வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?


வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?


சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பொளித்து
கிச்சுக்கிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் க்ழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?


திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைதான் கூறிடவா?


விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!


திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!