
Tuesday, February 25, 2020
மயிலம் சிவஞான பாலய தமிழ் கலை அறிவியல் கல்லூரி கருத்தரங்கில்
மயிலம் சிவஞான பாலய தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று சமயங்கள் காட்டும் சமுதாய மேம்பாடு குறித்து உரையாற்றிய தருணம்.






மு.பா. பாபு அவர்கள் நடத்திய வள்ளலார் வழிபாட்டு நிகழ்வில்
மு.பா. பாபு (சன்மார்க்க நேசர் மு.பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர்) நடத்திய வள்ளலார் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். (வள்ளலார் மஹோத்சவம்) காலை முதல் மாலை வரை நிகழ்ந்த விழாவில் பிற்பகல்தான் செல்ல முடிந்தது.
பசி ஆற்றுவித்தலை, சாதி ஒழிப்பை, மத ஒற்றுமையை, பெண் கல்வியை, திருக்குறள் பயிற்சியை, வள்ளுவர் சொன்ன மது உண்ணாமையை புலால் மறுத்தலை என்று இப்போது பரவலாகப் பேசப் படும் கருத்துகளை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் புரட்சித் துறவி வள்ளலார். பெரியார் வள்ளலாரின் பாடல்களில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து பதிப்பு செய்து இலவசமாகப் பொது மக்களுக்கு வழங்கியுள்ளார்.
சொல்லாமல் கொள்ளாமல் திடீர் என்று மேடை ஏற்றி விட்டு விட்டார். அதுவும் நன்றாகவே இருந்தது.
என் நூலையும் வழங்கினேன்.நிறைவாக கழிந்த பயன் நாள் இது


திருவள்ளுவர் தின கொண்டாட்டம் கவிப்பேரரசு இல்லத்தில்
ஆதிக் கவிஞன் ஐயன் திருவள்ளுவரை அன்மைக் கவிஞன் கவிப்பேரரசு அவர்களோடு சேர்ந்து வணங்கிய தருணம்.
பெசண்ட் நகரில் கவிப்பேரரசு அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில்.......
பொன்னாடை அணிவித்து கவிப்பேரரசு அவர்களின் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அவர்களைப் பற்றி நான் எழுதிய நூலோடு மற்ற நூல்களையும் தந்த நேரம்.
பேராசிரியர் அ.மு.ப. என்னும் நூலைப் பார்த்தவுடன் “ஏன்பா தமிழுக்கு வந்தே என்று என்னை கேட்டார் என் பேராசிரியர். என் எம். ஏ. எனக்கு வகுப்பு எடுத்தார் மிகவும் அன்பானவர்” என்று பூரிப்புடனும் புன்னகையுடனும் கூறிப் பெற்றுக்கொண்டார்..
மறைந்த நீதியரசர் மோகன் அவர்களைப் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது இழப்பு இலக்கியத்திற்குப் பேரிழப்பு என்று வருத்தம் தெரிவித்தார்.






வழக்கம் போல ஒளிப்பட அழகு நம்ம...... கோபிநாத்
நன்றி
புத்தகத் திருவிழாவில் - எம் தொலைக்காட்சீயில் - படித்த நூல் பற்றி
புத்தகத் திருவிழாவில் எம். சேனலுக்கு நான் படித்த எல். ரகோத்தமனின் நிழல் விரட்டும் பறவைகள் நூல் பற்றி பேசிய போது
காணொலியைக்(u tube) காண இங்கே சொடுக்கவும்

காணொலியைக்(u tube) காண இங்கே சொடுக்கவும்




















