Wednesday, April 20, 2016

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?



கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

2 comments:

  1. சிலரை பற்றி முழு கலங்கமில்லாத அன்புடன் சுயநலமின்றி தொடர்ந்து யோசிக்கும் போது அவர்களது சுக துக்கங்கள் நமக்கு கனவுகள் மூலமாகவோ அல்லது எண்ணங்களாகவோ நமக்கு தோன்றுகிறது.சுயநலமற்ற அன்பில் இது சாத்தியமே சகோதரி.பலரும் இந்த மாதிரி நிகழ்வுகளை அனுபவத்தவர்களே சகோதரி.உண்மையான அன்பு இருந்தும் உணர்ச்சிவசப்படாதவர்களுக்கு இது சாத்தியமே.

    ReplyDelete
  2. இப்போது பூரண குணம் அடைந்து விட்டீர்களா ஆதிரா?

    ReplyDelete