Tuesday, November 18, 2014

மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்


தமிழுக்குக் குரல் கொடுத்த உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு 11/11/14 அன்று சென்னை மியூசிக் அகதமியில் கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய பாராட்டு விழாவில் தோழி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன்


Thursday, November 6, 2014

12.11.14 நாளிட்ட குமுதத்தில் என் கவிதை


மரங்கள் அடர்ந்த அடவியொன்றில்
வார்த்தைகளோடு காத்திருந்து அந்த வனக்குயில்
அவன் வந்தவுடன் இசைக்க...

இரவும் பகலும் இறுக்கிக் கொள்ளும்
ஒரு மாலையில்
தென்றலின் வருடலோடும்
வண்டுகளின் கீதத்தோடும்
மலர்களின் மென்மணக் கசிவோடும்
நிலவின் இதச் சூட்டோடும்
மழைச் சாரலின் முத்தங்களோடும்
அதனோடு அவன் அமர்ந்திருந்த போது
இசையோடு இழைக்கத் தொடங்கியது
ஒரு பாடலை அந்தக் கானக்குயில்

எனக்கு இருள் பிடிக்கும் என்றான் அவன்
எனக்கு ஒளி பிடிக்கும் என்றது அது
எனக்குக் காதல் பிடிக்கும் என்றான் அவன்
எனக்குக் கவிதை பிடிக்கும் என்றது அது
இப்படியே தொடர்ந்த வெற்றுரையின் முடிவில்
அவனுக்காகவே அது வைத்திருந்த பாடலைக்
கேட்காமலே புறப்பட்டுப் போனான் அவன்

அவனது காதோரம்
எப்போதும் இசைத்துக் கொண்டே இருக்குமாறு
ஒரு மரண சாசனம் வரைந்து விட்டுப்
புறப்பட்டது
குரலிழந்த அந்தக் குயில்!

தென்றலினது
தேன்வண்டினது
மழையினது
மலரினது
நிலவினது
இசையாய்
அவன் கேட்டுக் கொண்டிருப்பது
அந்தக் காதல் குயிலின் வார்த்தைகளைத்தான்!


நன்றி குமுதம்

Sunday, July 20, 2014

அன்பகம் ஆண்டு விழா

மிக மிக மனத்திற்கு மகிழ்ச்சி பொங்கிய நாள் (19.07.14) இன்று.

அன்பகம், மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தின் 15 ஆம் ஆண்டு விழா, விருது வழங்கும் விழா, மற்றும் பாராட்டு விழா. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ச. மோகன், மாநில ஆணையர் மாற்றுத்திறனாளிகள் நலம் ஜி.... இராமகிருஷ்ணன் I A S, நீதிபதி மு. புகழேந்தி, அரிமா வி. சுரமணியம், மீனாட்சி கல்விக் குழும நிறுவனர் தலைவர் A.N. ராதாகிருஷ்ணன், உதவிக்கரம் மாநிலத்தலைவர் T.A.P. வரதகுட்டி, கலைமாமணி கவிஞர். ஏர்வாடி. எஸ். இராதாகிருஷ்ணன். அன்பகத்தின் நிறுவனர் டாக்டர் பெ. வீரமணி மற்றும் தொகுப்பாளினி செல்வி P.R. சிந்து

                                                 
                                             


         
 ஆன்மிக வரணனையாளர், தொகுப்பாளினி சிந்து செந்தாமரை   கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடன்

                                   
                   உதவிக்கரம் மாநிலத் தலைவர், உதவிக்கரம்

               N. பஞ்சாபகேசன், சாய் சங்கரா மேட்ரிமோனியல்


Monday, June 30, 2014

அப்போது ‘அழகு’
ஆதி நாட்களைப் போல் இல்லை
இப்போது எதுவுமே

அப்போது காடு நிரம்பியிருந்தது
இப்போது கட்டிடம்

அப்போது காற்று நிறைந்திருந்தது
நிலமெல்லாம்
இப்போது புகை மண்டலம்

அப்போது ஆன்மிகம் நிறைந்திருந்தது
இப்போது அரசியல்

அப்போது ஆடை மறைத்திருந்தது
அங்கங்களை
இப்போது மேல்நாட்டு வாடை

அப்போது காதல் நிரம்பியிருந்தது
நெஞ்சங்களில்
இப்போது காமம்

ஒற்றைச் சொல்லால் சொல்வதென்றால்
அப்போது ‘அழகு’
இப்போது
நரகு
----------


Wednesday, June 25, 2014

தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.

22.06.14 ஞாயிற்றுக்கிழமை தினமலர் பெண்கள் மலரில் என் நேர்காணல். 


Thursday, June 19, 2014

சென்னை கந்த கோட்டத்தில் வசந்தவிழா

 12/06/14 வியாழன் அன்று கந்த கோட்டம் முருகன் கோவிலில் வள்ளலார் என்னும் தலைப்பில் அடியேனுடைய சொற்பொழிவு நடைபெற்றது. அவை நிறைந்த ரசிகர்கள். மனம் நிறைந்த நிகழ்வு.

Monday, June 9, 2014

முரட்டுப் பிரியம்பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்

கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இறுகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்

தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

Sunday, June 8, 2014

பிரியம்பிணி
மூப்பு
மரணம்
எதன் பொருட்டோ

இன்றோ
நாளையோ
என்றோ ஒரு நாள்
என் இருப்பு
சூனியமாகலாம்

நாளோ
வாரமோ
மாதமோ
ஆண்டுக்கொரு முறையோ
திறந்திருக்கும் இதயத்திலோ
கனவுகளின் வரத்துக்காக
மூடியிருக்கும் விழிகளிலோ
நான் வரவும் கூடும்
வராமல் போகவும் கூடும்

இப்போதே ஒரு கவிதையை
எழுதி விடுகிறேன்
வழிகின்ற
பிரியத்தின் வண்ணத்தில்
வார்த்தைகளைத் தோய்த்தெடுத்து


Saturday, June 7, 2014

ரகசியமாகநீ தூவிய 
குறுநகையிலிருந்து
என் நிலத்தில் 
முளை விடுகிறது 
ஒரு செடி

உன் கூரை தாண்டிய

மேகம்
கொண்டு வந்து
பொழிகிறது
உன் சுவாசத்தை

உன் சாளரத்திலிருந்து

வந்த தென்றல்
புன்னகையைப் பூட்டுகிறது
பூக்களின் இதழ்களில்

பூத்துக் குலுங்கும்

உன்னை
எவருமறியாமல் வாசிக்க
ஒரு பெயர் சூட்டுவாயா
ரகசியமாக?


Wednesday, April 23, 2014

என் கவிதை நூல்.


உங்கள் எல்லோருடைய ஆதரவுடன் என் கவிதை நூல்.

அன்பு உறவுகளே!
உங்கள் கனிந்த மொழி என்னை வாழ்த்தும்.
கல்லெறி என்னை வளர்க்கும். 
இரண்டையும் எதிர்நோக்கி……


இப்போது டிஸ்கவரி புத்தக நிலையத்தில்


டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட்
6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முதல் தளம்
முனுசாமி சாலை, கலைஞர் நகர் (மேற்கு)
சென்னை 600 078
பேச 91 4466157525 / 9940446650

Saturday, April 19, 2014

சாதனையாளர் விருது - உங்கள் ஆதிராவுக்கு.....


சென்னை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று (19.04.14) நடந்த பதம்ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள், படத்திறப்பு, மற்றும் உதவிகள் வழங்கும் விழாவில்.... சாதனையாளர் என்னும் விருதினை வழ்ங்கினார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள். உடன் இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. எஸ். விமலா கலமாமணி அரிமா. டாக்டர் மணிலால், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கெ. ராஜன், அரிமா ச்க்தி வேல் ஆகியோர்Monday, April 14, 2014

பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழா

13.04.14 அன்று நடைபெற்ற பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழாவில்