Saturday, November 17, 2018

நன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா

#நன்றி ப. கி. பொ. ஐயா

1999 ல் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியேற்று சென்னை வந்து குடிபுகுகிறேன். பள்ளியில் மாணவர் மன்றத் தேர்வு நடத்துவது வழக்கம். மாணவர் மன்ற இதழான நித்திலக் குவியல் இதழ் தொடர்ந்து பள்ளிக்கு வரும். அந்த ஆண்டுத் தேர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது இதழுக்குப் படைப்புகள் அனுப்புங்கள் என்று அதன் தலைவர் புலவர் ப. கி. பொன்னுசாமி அவர்கள் தொலைபேசியில் சொன்னார்.
அப்போது நான் படைப்பாளி அல்லள். ஆனால் ஐயா கேட்டுவிட்டார்களே என்று வள்ளுவ வாழ்த்து என்னும் தலைப்பில் ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அதுதான் என் முதல் கவிதை. தொலைபேசியில் ஐயாவின் பாராட்டும் என் படைப்புகளும் தொடர்ந்தன. தொடர்ந்து பல கவிதைகளையும் கட்டுரைகளையும் தாங்கி நித்திலக் குவியல் என் இல்லம் வந்தது. ஆனால் ஐயாவை நான் நேரில் சந்தித்ததே இல்லை.
சமீபத்தில் கனடா உதயன் இதழாசிரியர் தமிழகம் வந்த போது அந்த வரவேற்பு விழாவில் ஐயாவைச் சந்தித்தேன். அழைப்பிதழில் பெயர் இல்லாமலும் சகோ. வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் என்னைப் பேசச் சொன்னார்கள். கனடா உதயன் ஐயா அவர்களைப் பற்றிப் பேசிவிட்டு (அவர் பற்றியும் எழுத வேண்டும். விரைவில்) என்னையும் ஒரு படைப்பாளி ஆக்கிய ப.கி. பொன்னுசாமி ஐயாவைப் பற்றிப் பேசினேன். ஐயாவுக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நித்திலக்குவியலுக்குப் படைப்புகள் தாருங்கள் என்று பல முறை சொல்லிச் சென்றார்.
என் முதல் கவிதையை அச்சேற்றிய.... அப்படிச் சொன்னால் பொருந்தாது. அச்சேற்றுவதற்காக என்னைக் கவிதை புனைய வைத்த ஐயாவுக்கு என் இதயமார்ந்த நன்றிகள்.

#தீபாவளி கொண்டாடி ஆச்சு
இன்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் அவர்களோடு நர்பவி முதியோர் இல்லத்துக்குச் சென்று தீபாவளி கொண்டாடி வந்தேன். எல்லோர்க்கும் புதுப்புடவை, இனிப்பு, காரம், பட்டாசுகள ஆகியவற்றைக் கொடுத்தார். பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மத்தாப்பையும் பூச்சட்டியையும் ஏற்றும் போது உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட என்னும் பாடலைப் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்தார்கள். 2 மணி நேரம் அற்புதமான உற்சாகமாகக் கழிந்தது. நீதியரசரின் மறுமகள் திருமதி லலிதா, இல்லத்தின் செயலாளர் திருமதி லட்சுமி கண்ணன், காவல் துறை அதிகாரி கணபதி ஆகியோரும் வந்திருந்தனர்

நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் விருது

இன்று (30.10.18) உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் என்னும் விருதளிப்பு விழா வெற்றிமுனை மாத இதழின் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவினை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்திய நீதிபதி மு. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நீதயரசர் ச.மோகன் அவர்களின் ஜூனியரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான திரு. துரைசாமி ராஜு தலைமை ஏற்றார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விழா மலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
ஸ்பிக் குழுமத்தின் தலைவர் திரு ஏ. சி.முத்தையா அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ராஜா பாதர், சேது பாஸ்கரா கலிவிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சேது குமணன், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் திரு மாசிலாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றிமுனை ஆசிரியரும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் மோ. பாட்டழகன் நனறி நவின்றார்.
நான் நிகழ்ச்சி நெறியாளராக......
வழக்கம் போல பாராட்டு மழையில்.......
திரு வீரமணி அவர்கள் நன்றாகப் பேசீனீர்கள் என்று கூறி பொன்னாடை போர்த்தும் போது ஒளிப்படக் கலைஞரை அழைத்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். நீதியரசர் ஏற்புரையின் போது பானுமதி இருக்காங்களே..... ரொம்பக் குறும்புக் காரி. இருக்கறது இல்லாதது எல்லாதையும் சொல்லுவார் என்றார். (அது பாராட்டா?! )
நீதியரசர் துரைசாமி ராஜு, நீதிபதி புகழேந்தி, டாக்டர் ராஜா பாதர், அன்பகம் டாக்டர் வீரமணி, டாக்டர் சேது குமணன் அவர்கள் மேடையில் பெண்களே இல்லை என்று வருந்தினேன். நீங்கள் இருந்தது நிறைவாக இருந்தது என்று கூறி அவரது கல்லூரியின் பேராசிரியர்களிடம் என்னைஅழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துப் பாராட்டினார். என் மதிப்பிநீற்குரிய நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளே நுழையும் போதே உற்சாகமாகப் பாராட்டினார் மூத்த வழக்கறிஞர் காந்தி கீழே இருந்தே சபாஷ் என்று சொல்லி சாடை செய்து பாராட்டினார். டாக்டர் சேயோன் (ஒவொரு முறை நான் பேசும் போது சைகையால் பாராட்டிக் கொண்டே இருந்தார். நிகழ்வு முடிந்ததும் மேடைக்கு வந்தும் பாராட்டினார். என் பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தான கிருஷ்ணன் நீதியரசரிடம் என் மாணவி என் மாணவி என்று என்னை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னார். அன்பு நண்பர் கவிஞர் கோபிநாத் வழக்கம் போல பாராட்டியும் ஒளிப்படங்களை எடுத்தும் கொடுத்தார். நான் அறியாத இன்னும் பலரது பாராட்டு மழையில்.......
குறிப்பு... நன்றி என் நேசத்துக்குரிய கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு. நான் நிகழ்ச்சி நெறி ஆள்கையை ஒத்துக் கொள்வதில்லை என்று சொன்ன போது., அப்படி இல்லை, நல்ல பெரிய நிகழ்வாக இருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள், உங்கள் குரலும் நீங்கள் நெறிப்படுத்தும் விதமும் அழகாக இருக்கிறது என்று என்னை நெறிப் படுத்தியமைக்காக......

(ஜோ மல்லூரியின் மழையில்)

ஜோ மழையில் நனைந்தேன்.......
(ஜோ மல்லூரியின் மழையில்)
************************************************
காலையில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் போது இந்தப் பக்கம் ஜோ மல்லூரி என்ற உற்சாகக் குரல். நான் என்னையும் அறியாமல் வாவ்வ்வ்வ்வ்வ்..... என்று உரத்துக் கூறிவிட்டு....... மகிழ்ச்சி வணக்கம் சொல்லுங்கள் என்றேன்.
அன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது அருமையாக இருந்தது. அங்கு சொல்லிச் செல்லும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தீர்கள். பிறகு அழைத்துப் பேசலாம் என்றால், நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதனால்தான் தாமதமாகப் பேசுகிறேன். ஆரூர் தமிழ்நாடன் அவர்களிடம் உங்கள் எண் பெற்றேன். என்று பத்து நிமிடம் பேசினார். அதில் பாராட்டே மிஞ்சி இருந்தது.
இப்படிச் சொல்லி முடித்தார்.
மேடையில் உள்ளவர்களை அறிமுகம் செய்யும் போது பலரும் எழுதிக்கொடுப்பதைப் படித்து விட்டுப் போய்விடுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் பற்றி நன்கு உள்வாங்கிக் கொண்டு அவர்களது சிறப்புகளைச் சொல்லி, மனமாறப் பாராட்டி அறிமுகப் படுத்தினீர்கள். அதில் ஒரு ஆழமான அன்போடு கூடிய ஈடுபாடும் ரசனையும் இருந்தது. என்று பாராட்டினார்.
அவரது பேச்சுக்கு அருகில் நானெல்லாம் நிற்கக் கூட முடியாது என்பதை நானறிவேன். அப்படிப் பட்ட ஆளுமை நம்மைப் பாராட்டுவதுதானே நமக்கு உற்சாகம் தரும். 16 நூல்களின் ஆசிரியரும் கவிஞரும் ஆகச் சிறந்த பேச்சாளரும் நடிகரும் இயக்குநரும் என்று பல்கலை வித்தகர் ஜோ மல்லூரி அவர்கள்.
அதிகாலையில் கொடுத்த உற்சாகத்திற்கு நன்றி ஜோ அவர்களே.

திரைப்பட நடிகராகப் பலரும் ரசித்த ஜோ மல்லூரி அவர்களை நான் இலக்கியவாதியாக அதிகமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படத்தைப் பற்றி சொன்னாலும்,

புதுக்கவிதைக்கும் மரபுக்கவிதைக்கும் இடையிலொரு பொதுக்கவிதை பாடும்
மதுக்கவிஞர். மதுக்கவிஞர் என்றால் போதையில் தள்ளாடும் கவிஞர் அல்லர். மது போல மயக்கும் மதுரக் கவிதை பாடுபவர். ”வெற்றி பெறும் வரை மனதை யுத்த நிலையில் வை. வெற்றி பெற்ற பின் மனதை புத்த நிலையில் வை” என்று கவிதை பாடும் கும்கி யானை
மேடைப் பேச்சிலோ பட்டத்து யானை
நல்லதோர் தமிழ் செய்யத் தொடங்கி பெண் பேதை அல்ல மேதை என்று வரிசையாக 16 நூல்களைத் தமிழுக்குச் செய்து தந்தவர். அமிர்தா என்னும் அழகியோடு (நூலின் பெயர்) நீங்கள் இருந்தது போதும். இது நெய் ஊற்றும் நேரம் (இதுவும் நூல்). ஆம் பேரா. நளினி தேவிக்காக அன்பு நெய் ஊற்றும் நேரம். நடிப்புக் கல்லூரி, பேச்சுக்கல்லூரி, ஜோ மல்லூரி அவர்களே வருக!

என்று அவரது கவிதையையும் படைப்புகளையும் முன்வைத்து அவரை அறிமுகப் படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.

எப்போதும் அறிமுகம் இல்லாதவர்களோடு  ஒளிப்படம் எடுக்கவும் நானாகச் சென்று பேசவும் ஒரு தயக்கம் என்னிடம் உண்டு.  உங்களோடு ஒளிப்படம் இல்லை. அதனால் இந்தப் படம் இருக்கேஎனக்குச் சிறப்பு செய்வதை ஓரக்கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஜோ அவர்களே.... நன்றி

நளினி தேவியின் 3 நூல்கள் வெளியீட்டு விழாபேராசிரியர் முனைவர் நளினிதேவியின் நூல் வெளியீட்டு விழா......... கலந்து கொண்ட அத்தனை பேரையும் இதயத்தோடு உறவாட வைத்த அன்புத் திருவிழாவாக இருந்தது.
நிகழ்ச்சி நெறியாளர் நான்.. வெகுவாகப் பாராட்டினார் பேரன்புப் பெட்டகமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள். கவிஞர் ஜெயபாஸ்கரன், திருமாவளவன், பேரா. ஹாஜா கனி மற்றும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பலரும் பாராட்டினார்கள். சிலர் (பெண்கள்) எப்படி எங்களைப் பற்றியெல்லாம் நச் நச்சென்று சொன்னீர்கள் என்று வியப்பாகக் கேள்வி கேட்டுப் பாராட்டினார்கள். குறிப்பாக தமிழ் இந்து மானா பாஸ்கரன் அவர்கள் தொங்கட்டான் எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டு விட்டுப் பாராட்டிச் சென்றார்.
எல்லாம் நீங்க பாத்துக்கோங்க என்றும் வரவேற்புரையில் சொல்ல வேண்டியதையும் நீங்களே சொல்லுங்கள் என்றும் கூறி அவ்வளவு சுதந்திரம் கொடுத்தால் நிகழ்ச்சி எப்படி நேர்த்தியாக அமையாமல் இருக்கும்?ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் அந்த அன்புக்கே நிகழ்ச்சி நேர்த்தியாக அமைந்தது. (மேடையில் பேசியவர்கள் சுமார் 30 பேர்)
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் திருக்குமாரன் அவர்கள் (பெயர் நினைவில் இல்லை) இளைய ஆரூர் தமிழ்நாடன். மரியாதை,பேரன்பு சுறுசுறுப்பு, உதவி, தேடல் அத்தனையும் நிறைந்த இன்னொரு ஆரூர் தமிழ்நாடன்.
எங்கள் ஐயா... பேரா.இராம குருநாதன் கொடுத்த நேரத்திற்குள் பேச்சை முடித்து..... சரியா முடிச்சிட்டேனா என்று கேட்டுக்கொண்டே இறங்குவார். இப்போதும் அப்படியே..... பேச்சாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி. எப்போதும் போல இந்நிகழ்வுக்கும் என்னைப் பரிந்துரைத்தவர்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள்..... எப்போதும் கலகலப்பாக,,,, ஊக்குவித்தல், பாராட்டுதல், உற்சாகப் படுத்துதல் என்று இருப்பவர். என் முன்னேற்றத்தில் அதிகம் அக்கறை கொண்ட என் புதுக்கவிதை ஆசான். அன்றும் அப்படியே........ ஆனால் மேடையில் நிறைய கலாய்த்தார்.
இவருடன் சேர்ந்து கொண்டு இதழியல் போராளி நக்கீரன் கோபால் அவர்களும் கலாய்த்து தள்ளிவிட்டார். ஆனால் எல்லாம் பாராட்டுக் கலாய்த்தல்.
மகிழ்ச்சியான நிகழ்வுக்கு....... காரணமான ஆரூர் தமிழுக்கு இனிய நன்றிகள்