Friday, May 14, 2010

அன்புத் தம்பி சிவாவுக்கு வாழ்த்துக்கள்!!!





வெள்ளிவிழா நாயகனே!
உனக்காக
வாழ்த்தொன்று
வரைந்துவிட நினைக்கையிலே
தவம்புரிந்த சொற்கள் எல்லாம்
என்னை எடு என்னை எடு
என்று வந்து வரிசையிலே
கைகட்டி நின்றதென்ன!!

அத்தனையும் எடுத்தாள
ஈகரையில் பக்கங்களோ
மொத்தம் இல்லை..

சங்கம் வைத்து
தமிழ் வளரத்த
தென்னவனை எண்ணுகிறேன்
தங்கத்தமிழ் மன்னவனாய்
கோலங்கொண்டு
கண்ணுக்குள்ளே
நீவந்து மின்னுகிறாய்!

இமயத்தில்
புலி பொறித்த
முன்னவனை எண்ணிடினும்
இணையத்தில்
தமிழ் பொறித்த
ஈகரையின் நாயகனாம்
நீ வந்து எக்காளமிடுகின்றாய்!!

வடமலையின்
கல் கொணர்ந்து
கண்ணகிக்கு சிலை வடித்த
வில்லவனை நினைத்தாலும்
சொல் கொண்டு
கலை வடித்த
கன்னித்தமிழ் காவலனாய்
களிப்பூட்டி சிரிக்கின்றாய்!!

தம்பி! உன்
உதட்டுமொழி கேட்டதில்லை
கற்பனைதான் என்றாலும்
நித்தமும் நீ
எழுத்துக்களில் ஓசையேற்றி
காதோரம் பேசுகிறாய்
அன்பு மொழி ஆயிரந்தான்!!

மூச்சுக்கு மூன்று முறை
அக்கா என்றாய்!
பச்சை குருதியிலே
பாசத்தை ஏற்றிவிட்டாய்
வெற்று பேச்சுக்கு சொல்வதில்லை
முற்றும் மூச்சடங்கும்
முன் உந்தன்
முழுமதியம் முகங்காண
ஏங்குகின்றேன்!!!

வாழ்த்து என்ற பயணத்தைத்
தான் தொடர்ந்தேன்..
பாதியிலே பாதை மாறி
பாசக் கதையதனை
பகர்ந்து விட்டேன்
மீண்டும் சுய நினைவு
வந்ததனால்
வாழ்த்துகின்றேன்
வையப்புகழ் பெற்றிடு நீ...

27 comments:

  1. அண்ணன் சிவா பற்றிய இக்கவிதை நூற்றுக்கு நூறு உண்மை அதை புனைந்த உங்கள் கவிதை வரிகள் அற்புதம்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மணிகண்டன்..

    ReplyDelete
  3. கவிதை வரிகள் அருமை...

    Disk:> வார்த்தை சரிப் பார்ப்பை நீக்கி விடுங்கள்..அப்பொழுதுதான் ஈசியாக கருத்து சொல்வார்கள்...

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அஹமது இர்ஷாத். வார்த்தைச் சரிபார்ப்பை நீக்கி விட்டேன். கருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஈகரையின் நாயகனை வாழ்திடக்கண்டு ஆனந்தம் வரிகள் அத்தனையும் மெய்ச்சிலிர்க்க வைத்தது

    ReplyDelete
  6. ஈகரை நாயகன் ந்ம் அனைவரின் அன்புக்குப் பாத்திரமானவன் அல்லவா? அவனை, அந்தத் தாயுள்ளத்தை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் ஹாசிம்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்..

    ReplyDelete
  7. அருமையான இரு வாழ்த்துப்பாக்கள், அதுவும் உரியவருக்கே!!!
    மிக அருமையாக வார்த்தைகள் கையாண்டுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    தங்கள் நலம் விரும்பி.

    ReplyDelete
  8. எங்கள் ஔவையாரே தங்களை ஈகரையில் காணக்கிடைக்காமை மிகவும் கவலையாக உள்ளது என்தனிமடலுக்காவது தொடர்பு கொள்வீர்களா
    haseem_mhm@yahoo.com

    ReplyDelete
  9. அன்பு ஹாசிம். தங்கள் அன்புக்கு என் இதயங்கனிந்த நன்றி. சற்று கூடுதல் வேலை காரணமாக நான் ஈகரைக்கு வர இயலவில்லை. இத்துனை அன்பான உறவுகள் ஈகரையில் என்வசம் இருக்க ஈகரையை விடவும் என் உறவுகளை இழக்கவும் என்னால் முடியுமா ஹாசிம்? விரைவில் ஈகரையில் சந்திப்போம் ஹாசிம்.

    ReplyDelete
  10. ஈகரையின் நாயகன் என்னின் உடன்பிறவா சகோதரன் பற்றிய கவியை படிக்க படிக்க பொருள் தரும் ஒன்றாய்...

    வாழ்த்துகவி பாடிய உங்களை மனதார வாழ்த்துக்கின்றேன்... வணங்குகின்றேன்...

    ReplyDelete
  11. அன்பு ஆதிரா மேடம் நீங்கள் தந்துள்ள இந்த வாழ்த்து சிவா அண்ணனுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது ஏற்றுக்கொள்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அவரும் மிகவும் அழகாகவும் உள்ளார் அவர் அன்பும் அப்படியே அவர் பொறுமையும் அப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் உங்கள் வாழ்த்தில் நான் மிகவும் மகிழ்ந்தேன் மேடம் நன்றி வாழ்க உங்கள் பணி நன்றி வணக்கம்.

    ReplyDelete
  12. அருமை வரிகள் மேடம் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நன்றி அக்கா! தங்களின் வாழ்த்துகளுக்கு தகுதியானவன் இல்லை என்றாலும் மகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete
  14. அருமை மேடம் உங்களின் வாழ்த்துகள் பாடிய கவிதை

    ReplyDelete
  15. ஈகரையின் நாயகன் நம் அனைவரின் அன்புக்குப் பாத்திரமானவன்.. அன்பால நம்மை எல்லாம் அடிமையாக்கி ஆட்டுவிப்பவன்..அவனை வாழ்த்துவதில் ஆனந்தமே.வாசன்..அதை விட தேடி வந்து வாழ்த்து சொல்லும் அன்பு உறவுகளை (உங்களை எல்லாம்) கொடுத்ததற்கு அவனை வாழ்த்தியே தீர வேண்டும். அன்பின் சிகரம் வாசனை வாழ்த்தும் நல் வாய்ப்புக்காக காத்தலுடன்...

    ReplyDelete
  16. தொடரும் நிழலாய் உடன் வரும் அன்பு உறவே.. சிவாவையும் உங்களையும் வாழ்த்த கிடைத்த பேற்றினை என்னி மகிழ்கிறேன்..தங்களின் அன்பான வருகைக்கும் மனமர்ந்த வாழ்த்துக்கும் என்றென்றும் என் நன்றியும் அன்பும்..

    ReplyDelete
  17. ஈகரையின் பாசப்பற்வையே இக்கரைக்குத் தொடர்ந்து வந்து கருத்து வழ்ங்கும் உங்கள் பாசத்திறிகு தலை வணங்குகிறேன் சம்ஸ்.. எப்போது மீண்டும் ஈகரைக்கு தங்கள் வருகை என்று ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
  18. அன்பு சம்ஸ்...ஒரு முறை போதாதென்று மறுமுறை வந்து பொழிகின்ற பாசத்திற்கு என்றென்றும் நன்றியுடன்..

    ReplyDelete
  19. அன்பு சிவா..
    ”தக்கார் தகவிலார் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்”
    உங்கள் மனம் மகிழ்ந்தால் ஈகரைப் பூத்துக் குலுங்கும். ஈகரை பூத்துக்குலுங்கினால் அந்த மணத்தில் உறவுகள் மனம் நிறையும்..இதை விட யான் வேண்டுவது என்ன? பாதம் பதித்தமைக்கு
    வாழ்த்தை ஏற்றுக்கொண்டமைக்கு, பதிவிட்டமைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் குறைவில்லாத அன்புக்கு..சொல்ல முடியவில்லை இத்ற்கு மேல்..வார்த்தைகளின்றி..ஆனந்தக்

    ReplyDelete
  20. என் நலம் விரும்பும் அந்த evil க்கு பறந்து வந்து பாராட்டு பகர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  21. amma thangal tamillku nandri

    ReplyDelete
  22. amma nengal tamiluku purium thondu thodara vendugiren happy mothers day ma i love you ma....

    ReplyDelete
  23. இருமுறை வந்து வாழ்த்து சொன்ன என் அன்பு மகள்/மாணவி சீதலா/அதிதி,
    உன் அன்புக்கு என்றும் நான் அடிமைடா...

    அன்னையர் தினத்திது என் அன்பு மகளின் வாழ்த்து தித்திக்கிறது. நன்றிம்மா....

    ReplyDelete
  24. என் தமிழ் மனசு மற்றும் சகிப்புத்தன்மை இந்தக் கவிதைக்கு பின்னுட்டமிடும் அளவுக்கு இன்னும் பருவம் எய்தவில்லை...
    என் அறிவு இக்கவிதை நாயகனின் அன்பை புரிந்த பின் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு விசாலமானதும் அல்ல.
    என் மொழி என் அறிவு இவற்றால் நான் கூட அளவுக்கதிகமாக அன்பு செலுத்தி ஏமாற்றப்பட்ட வெளிப்படையானவன். கவிதை வரிகள் அழகு அதன் முகவரியைத்தவிர...
    வருந்துகிறேன் தமிழே..

    ReplyDelete
  25. அன்பு அப்துல்லா,
    இப்படியெல்லாம் திட்டினா நாங்க ரொம்ப சின்னப்புள்ளங்க இல்லையா.

    ReplyDelete
  26. இதன் பொருள் இப்போதுதான் புரிந்து கொண்டேன் அப்துல்லா. வருந்துகிறேன்.

    ReplyDelete