Friday, June 1, 2012

மின்னல் வெட்டி இதயம் கிழிகிறதே!!!



மேகத்துக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
வானம்
கிழிவதில்லை

உன்
இமைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
இதயம்
கிழிகிறதே
எப்படி?

8 comments:

  1. இதயம்
    கிழிவதில்லை (அதேசமயம் )

    மின்னல் வெட்டில்
    வானம் சலனப் படுவதைப்போல்
    இமைவெட்டில்
    இதயம் சலனப் படுகிறது தோழி

    கவிதையில் காதல் தூக்கலா இருக்கு தோழி

    ReplyDelete
    Replies
    1. எப்படி என்ற வினாவுக்கு அழகாக இப்படி என்று பதில் கூறும் கவிதை செய்தாலி. முதலில் சலனம். இறுதியில் சவம். எண்ணற்ற காதலின் நிலை இது.. பகிர்வுக்கு நன்றி தோழர்.

      Delete
  2. அட எப்படி ?

    கேள்விக்கு பத்தி சொவதுதான்-
    எப்படி.....?

    நல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சீனி. எங்களுக்குக் கேள்வி கேட்கத்தான் தெரியும்.

      Delete
  3. மின்னல் வெட்டில்
    வானம் அழுகிறது!
    இமைகள் வெட்டில்
    இதயம் கிழிகிறது!

    அருமையான சித்தனை தான் சகோதரி.

    வானத்துக்கு உணர்வெனும்
    நரம்புகள் இல்லையே?!
    இதயம் முழுதும்
    தமனிகளாலும் சிறைகளாலும்
    உணர்வுகளை உட்கொண்டல்லாவா இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்களது கவிதை அழகு. சிந்தனை நரம்புகளே மனிதனின் பலமும் பலவீனமும். அழகான கவிதைக்கு நன்றி மகேந்திரன்.

      Delete
  4. பாருக்கும் பார்வைக்கு வரைமுறை இன்றி
    போகும்போது கிழியத்தான் செய்யும்....
    சில உறவுகளும் அப்படிதானே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலைநிலா.

      Delete