Tuesday, October 23, 2012

அரிதாரம்



முகத்துக்குப் பூசுவதுபோல்
ஒவ்வொரு நாளும்
உறங்கி விழிக்கையில்
அகத்துக்கும்
அரிதாரம் பூசுகிறோம்

என்றாவது
ஒப்பனை கலைந்துவிடுமோ
என்னும் அச்சத்தில்
அவ்வப்போது
வெளுத்து விடுகிறது 
முகம்

12 comments:

  1. மறுக்க முடியாத உண்மை கவிதாயினி
    எல்லாரும் அப்படித்தான் என்னையும் சேர்த்து

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்து உள்ள்து கவிதை. இதில் நீ(ங்கள்) வேறு நான் வேறா? நாம். நன்றி செய்தாலி.

      Delete
  2. Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  3. புரியவில்லை நான் கவியில் தேரியவன் கிடையாது
    கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிட்டுக்குருவி,
      என்ன புரியவில்லை. மனத்தில் ஒன்று வெளியில் ஒன்று என்றே நாம் வேஷம் போட்டு வாழ்கிறோம் என்று கூறியுள்ளேன். சிறகடித்துப் பறந்து வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சி.கு.

      Delete
    2. அட ஆமா.......
      இதக்கூட புரியாதவனாகவா இருக்கிறேன்

      Delete
  4. அடுத்தது காட்டும் பளிங்கு -- குறளுக்கு விளக்கம் புதிய பரிமாணத்தில் . அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிவா, நலமா?
      உண்மைகள் சில நேரம் கவித்துளிகளாக... நன்றி சிவா

      Delete
  5. உண்மை. வாழ்க்கையே ஒப்பனை கலைந்துவிடும் அச்சம் தான்.
    இந்தக் கவிதையை என் பதிவில் பயன்படுத்த அனுமதிப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் வாழ்கிறோம்..

      என்ன கேள்வி இது அப்பாதுரை? உங்களுக்கு இல்லாத உரிமையா? அது என் பாக்கியமன்றோ...

      Delete