Saturday, September 5, 2015

ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்துஆசிரியர் செம்மல் விருதுபெற்ற நெகிழ்வான தருணம். 
*************************************************************************************************
*
இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.
* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.
* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.
* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.
.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.
* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.
*************************************************************************************************
எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது. அன்பு....... அன்பு... அன்பு.... அன்பு மட்டும்தான்.
*************************************************************************************************















5 comments:

  1. விருது கிடைத்தாலோ பட்டிமன்றத்தில் பேசினாலோதான் பதிவு வருமா.? ஆசிரியச் செம்மலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam ஐயா. அப்படியெல்லாம் இல்லை. நேரம் கொஞ்சம் இடம் கொடுக்க வில்லை. மீண்டும் பழைய சுறு சுறுப்புடன் இயங்குவேன். தங்கள் உற்சாகமூட்டலுக்கு நன்றி அய்யா..

      Delete
  2. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. யாழ் பாவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்

      Delete
  3. தாங்கள் ஆசிரியர் செம்மல் விருது பெற்றது மகிழ்ச்சி அள்ளிக்கிரதுமா.. வாழ்த்துக்கள்.. புகைப்படத்தில் உங்களுடன் இருக்கும் முதிய அம்மா தங்களின் அம்மாவா?

    ReplyDelete