Saturday, November 17, 2018

நளினி தேவியின் 3 நூல்கள் வெளியீட்டு விழா











பேராசிரியர் முனைவர் நளினிதேவியின் நூல் வெளியீட்டு விழா......... கலந்து கொண்ட அத்தனை பேரையும் இதயத்தோடு உறவாட வைத்த அன்புத் திருவிழாவாக இருந்தது.
நிகழ்ச்சி நெறியாளர் நான்.. வெகுவாகப் பாராட்டினார் பேரன்புப் பெட்டகமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள். கவிஞர் ஜெயபாஸ்கரன், திருமாவளவன், பேரா. ஹாஜா கனி மற்றும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பலரும் பாராட்டினார்கள். சிலர் (பெண்கள்) எப்படி எங்களைப் பற்றியெல்லாம் நச் நச்சென்று சொன்னீர்கள் என்று வியப்பாகக் கேள்வி கேட்டுப் பாராட்டினார்கள். குறிப்பாக தமிழ் இந்து மானா பாஸ்கரன் அவர்கள் தொங்கட்டான் எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டு விட்டுப் பாராட்டிச் சென்றார்.
எல்லாம் நீங்க பாத்துக்கோங்க என்றும் வரவேற்புரையில் சொல்ல வேண்டியதையும் நீங்களே சொல்லுங்கள் என்றும் கூறி அவ்வளவு சுதந்திரம் கொடுத்தால் நிகழ்ச்சி எப்படி நேர்த்தியாக அமையாமல் இருக்கும்?ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் அந்த அன்புக்கே நிகழ்ச்சி நேர்த்தியாக அமைந்தது. (மேடையில் பேசியவர்கள் சுமார் 30 பேர்)
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் திருக்குமாரன் அவர்கள் (பெயர் நினைவில் இல்லை) இளைய ஆரூர் தமிழ்நாடன். மரியாதை,பேரன்பு சுறுசுறுப்பு, உதவி, தேடல் அத்தனையும் நிறைந்த இன்னொரு ஆரூர் தமிழ்நாடன்.
எங்கள் ஐயா... பேரா.இராம குருநாதன் கொடுத்த நேரத்திற்குள் பேச்சை முடித்து..... சரியா முடிச்சிட்டேனா என்று கேட்டுக்கொண்டே இறங்குவார். இப்போதும் அப்படியே..... பேச்சாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி. எப்போதும் போல இந்நிகழ்வுக்கும் என்னைப் பரிந்துரைத்தவர்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள்..... எப்போதும் கலகலப்பாக,,,, ஊக்குவித்தல், பாராட்டுதல், உற்சாகப் படுத்துதல் என்று இருப்பவர். என் முன்னேற்றத்தில் அதிகம் அக்கறை கொண்ட என் புதுக்கவிதை ஆசான். அன்றும் அப்படியே........ ஆனால் மேடையில் நிறைய கலாய்த்தார்.
இவருடன் சேர்ந்து கொண்டு இதழியல் போராளி நக்கீரன் கோபால் அவர்களும் கலாய்த்து தள்ளிவிட்டார். ஆனால் எல்லாம் பாராட்டுக் கலாய்த்தல்.
மகிழ்ச்சியான நிகழ்வுக்கு....... காரணமான ஆரூர் தமிழுக்கு இனிய நன்றிகள்

No comments:

Post a Comment