Tuesday, March 29, 2011

ஆழியின் அலைகளாய்...

http://images2.layoutsparks.com/1/6927/moonlit-sea-night-view.jpg 

முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை


இதயச சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவு சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக..


கடல வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும்
உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...

Sunday, March 27, 2011

மங்கையும் மனைவியும்



மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின் 
உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு 
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை 
மைதிலியை
உயிரோடு கனலாட்டி
கல்லானான்.



ஆதிரா..

Saturday, March 12, 2011

ஏசுவும் என் சீடனே...

http://dl9.glitter-graphics.net/pub/414/414649wfvw09dvvb.gif


பிறந்த போதே
சிலுவையில் அறையப்பட்டேன்
பெண் என்ற காரணத்தல்!


உன் காதல் வெள்ளியின்
கருணை ஒளியால்
உயிர்ப்பு கொண்டேன்!


வரதட்சனை
ஆணிகளால் துளைத்தாய்
எனதுடலை!


இரத்தம் சிந்த
மீண்டும் சிலுவையில்
அறையப் பட்டேன்!


ஏசுவும்
என் சீடன் என்ற
தகுதியையே அடைவான்!


நான் இரண்டாம் முறையும்
சிலுவையில் உயிர்த்தேன்
உயிரோடு உலாவரும்
பிணமாக!




புதுகைத் தென்றல் இதழில் சென்ற ஆண்டு
மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது.
நன்றி புதுகைத் தென்றல்.