Tuesday, September 28, 2010

மனைவியின் தகுதி




http://t0.gstatic.com/images?q=tbn:875Y1o-MO0YeoM:http://media.picfor.me/0011B45/Woron-stunning-photos-Glamour-Portraits-girl-woman-eye-photo-tear-Fashion-%D1%87%D0%B1-%D1%84%D0%BE%D1%82%D0%BE_large.jpg&t=1

நினைவுக் கோப்பை 
நிறைந்து வழிகிறது 
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும் 
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத 
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
தெரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!


Friday, September 17, 2010

வாசனுக்கு ஒரு வாழ்த்துப்பா....



தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’காதல் கவிஞன் ’ என்ற பேர்பொறித்தாய்!
சொல்லாடல் புரி ஆண் மாதவியாய்!

தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நிலவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.

உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணிக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய் எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடத்தான் எழுத்துக்கள் என்வசமில்லை

கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!

மனிதம் வழிகின்ற மலைத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!

நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு! என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!