ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, December 18, 2010

மரபு..என்னெனவோ
எழுத நினைக்கிறேன்
சமத்துவத்தைப்
புனையத் துடிக்கிறேன்

கடித்துத் துப்பியதில்
நகங்களெல்லாம் கரைந்து
சதைகளே மிஞ்சின

விரல்களில்
கசிந்த இரத்ததைப்
பார்த்த போது
புரிந்தது
கவிதை எழுதுவதைவிட
சமையல் செய்வது
எளிதென்று

மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!