மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின்
உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!
மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு கனலாட்டி
கல்லானான்.
ஆதிரா..
மங்கைக்கு கடவுளானான்...
ReplyDeleteமனைவிக்கு கல்லானான்...
இந்த மனைவியென்னும் மங்கையை மீட்க வேற எந்த கடவுளும் வரவில்லையோ?
இராமனை எதிர்க்க தைரியம் கொண்ட இராவணன் நெஞ்சம் வேறு யாரிடத்திலும் இல்லாமல் போனதோ?
மங்கைக்காகக் கனிந்த உள்ளம்,
ReplyDeleteமனைவிக்காகக் கல்லானதேன்?
நன்று!
superb contradiction !!!
ReplyDeleteஏதேதோ கேட்கிறீர்கள் வாசன்? ஒன்றும் புரியவில்லை. கடைசியில் கருத்துக்கு நன்றி..
ReplyDeleteஅது பொதுவான குணம். அடுத்து வீட்டுப் பெண்களுக்கு ஆயிரம் உதவி செய்யும் ஆண்களில் சிலர் தன் மனைவிக்கு ஒரு சிறு துறும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள்.. பிற பெண்களின் பெரிய தவறையும் சிறியதாக நினைப்பார்கள். தன் மனைவியின் சிறு தவறையும் ஊதிப் பெரிதாக்குபவர்களும் உள்ளனர். இராமனும் ஆண்மகந்தானே.. ஆயிரம் காரணம், தத்துவம் கூறுவார்கள்..
ReplyDeleteமிக்க நன்றி நாகசுப்ரமணியன் அவர்களே..
ReplyDeleteI AM AFRAID THE COMPARISON IS NOT APT.ACCORDING TO THE STORY, RAAMAR DID NOT KNOW ANYTHING ABOUT THE STONE-TURNED AKALIKAI. ONLY AFTER SHE (STONE) REGAINS HER FORM HE COMES TO KNOW ABOUT HER STORY AND THE SAAPA VIMOCHANAM. IN THE SECOND INSTANCE HE HAD BEHAVED LIKE A VERY ORDINARY HUMAN BEING OF THOSE DAYS. BUT THE FORM AND THE PRESENTATION OF YOUR KAVITHAI MERITS APPRECIATION.
ReplyDeleteமங்கை
ReplyDeleteஎன்ற காரணத்தால்!
இந்திரனின்
உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!
இது அன்றுதொட்டு இன்றுவரைத் தொடரும்
உண்மைச் சம்பவங்கள்!...அருமை பதிவுக்கு
நன்றி வாழ்த்துக்கள்..
வித்தியாசமான பார்வை.நல்ல கவிதை.
ReplyDeleteஉங்க பதிவை இத்தனை நாள் பார்க்கவே இல்லை தோழி அம்பாளடியாள். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி. நன்றி
ReplyDeleteஓ நூருல் அமீன். நீண்ட நாள் கழித்து தங்கள் காலடித்தடம் பார்த்து மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
ReplyDeleteஅன்புச் சகோதரி ஈகரையின் வழிகாட்டுதலில் இங்கு வாசம் செய்யும் பேறு பெற்றேன். வசப்படுத்திவிட்டது உங்களின் வரிகள்...எல்லாவற்றையும் வாசிக்க ஆரம்பித்த போது ஒன்று நினைவில் பட்டது நிறைய நாட்களை வீணடித்துவிட்டேன் என்று தற்போது தான் இந்த தளம் கண்ணில் பட்டது. நிச்சயமாக இங்கே வாசிப்பவன் மனதை வசப்படுத்தும் வித்தை நிறையவே இருக்கிறது...
ReplyDeleteதமிழ் உங்கள் கரங்களில் தங்கச்சிலம்பம் ஆடுகிறது...மெத்த மகிழ்ச்சி....
அன்பு அப்சான்,
ReplyDeleteதங்கள் முதல் வருகையே என்னை மிகவும் மகிழ்வித்தது. அதிலும் முதல் கருத்து மெய்சிலிர்க்க வைத்துவிட்டது எனலாம். தாங்கள் இவ்வாறு பாராட்டிக் கூறுமளவிற்கு எனக்குத் தகுதி இல்லை என்றாலும் என்னை இப்பாராட்டுக்கு உரியவகையில் தகுதிப்படுத்திக்கொள்ள முயல்கின்றேன். தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி அப்சான்.
காலப் பற்றாக்குறையால் அதிகம் இப்போது எழுத முடியவில்லை. மீண்டும் விட்ட இடத்தை வேக முயற்சியால் நிரப்புவேன். அப்போதும் தங்கள் போன்றவர்களின் ஊக்குவித்தலை எதிர்நோக்கி... நன்றியுடனும் அன்புடனும்...
அன்பு G.M Balasubramaniam ஐயா,
ReplyDeleteஎப்படி இத்தனை நாள் உங்கள் பதிவுக்குப் பதில் சொல்லாமல் இருந்தேன் என்று தெரிவில்லை. மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்.
என்னதான் இராமனுக்கு அகலிகையின் வரலாறு தெரியாது என்றாலும் அவர் கடவுள் அவதாரம்தானே...
அதுசரி யாரோ ஒருவன் சொன்னதற்காக மனைவியைக் கானகம் அனுப்புவது, சோதிப்பது இதெல்லாம் சரியா?
இது இன்றும் தொடர்ந்தால்!!!!!!!!!
(குறிப்பு நானும் ஆன்மிகவாதியே...கடவுள் மறுப்புக் கொள்கை சிறிதளவும் எனக்கு இல்லை. இதெல்லாம் ஒரு பெண்ணியச் சிந்தனையே. தவறிருந்தால் மன்னிக்கவும்)
வலிதரும் கவிதை வரிகள் காத்திருக்கின்றது என் தோழி
ReplyDeleteதங்கள் வரவுக்கும் பொன்னான கருத்திற்கும் .முடிந்தால்
வாருங்கள் .உங்கள் உணர்வுகளையும் பகிருங்கள் .