முத்தத்தின் மீது வெறுப்பென்று
ஒன்றும் இல்லை
முத்தம் தூய்மையானதுதான்
கண்ணீரைத் தடம் மாற்ற
காமத்தை உருமாற்ற
பெருமைப் பட
பாராட்ட
எல்லாவற்றிற்குமே
ஒரு முத்தம் போதுமானதாக
இருக்கின்றது
ஆலயத்திற்கு ஒர் ஆடை
அரங்கிற்கு ஒர் ஆடையென
தரம் பிரித்து அணிவதைப்
போல
முத்தங்களும் தரம் பிரித்துப்
பரிமாறப் பட வேண்டும்
அழுந்தப் பதியும் புறங்கை
முத்தத்தில்
கருகி விடுகின்றன உரோமங்கள்
உச்சி முகர்வதில் மெச்சிக்
கொடுப்பதில்
இதழ்வழி பீறிடும் வெப்பம்
ஓசோனின் கிழிசலாய் துளைத்து
விடுகின்றன
நெற்றியை
அதிர அதிர கொடுக்கும்
முத்தத்தின் சந்தடி
மூச்சினை முட்டவே செய்கிறது
பல நேரங்களில்
மழலைகளின் முத்தங்களில்
கூட
பால்மணம் வீசுவதில்லை….
பால்ய மனம் வீசுகிறது
சில நேரங்களில்
முத்தத்தின் மீது வெறுப்பென்று
ஒன்றும் இல்லை
முத்தம் தூய்மையானதுதான்
என்றாலும்………
அவசரமாக ஒரு தீர்மானம்
நிறைவேற்றி விட வேண்டும்
“இனி
மலர்களின்
முத்தம் தவிர
வேறு
எதனையும்
ஏற்பதில்லை”
- ஆதிரா முல்லை
நன்றி புதுகைத் தென்றல்
நமக்குத் தெரிந்தது அன்பு முத்தம் ஒன்றுதான். அதனை இத்தனை வகைப் படுத்த முடியுமா.?
ReplyDeleteஜி.எம்.பி. ஐயா. அன்பு நன்றி
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
மிக்க நன்றி யாழ் பாவாணன் ஐயா
Deleteஅட ராமா... இது தெரியாம நானு அப்பாவியா இருந்து விட்டேனே! நலம் தானே!
ReplyDeleteஎது தெரியாம ஜி?
Deleteஅட ராமா... இது தெரியாம நானு அப்பாவியா இருந்து விட்டேனே! நலம் தானே!
ReplyDeleteமுத்தமொழி மிகவும் அருமை தோழி!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வைத் தருகின்றது. நன்றி தோழி
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
நன்றியும் அன்பும். வருகிறேன் வருகிறேன்.
Delete