Sunday, March 24, 2019

Aathira mullai ( Bhanumathi) ஆதிரா முல்லை - படிப்பும் படைப்பும்

பேராசிரியர். முனைவர் ப. பானுமதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூதகுடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

கல்வித்தகுதி

இவர் தம் பள்ளிப் படிப்பை அன்றைய பெரியார் மாவட்டம் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சலூர் என்னும் சிற்றூரில் பயின்றார். பி. லிட்., எம்.ஏ., எம்.ஃபில். ஆகிய மூன்று பட்டங்களையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையிலும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலையின் பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றுள்ளார். இவர் ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் தம் இளமுனைவர் பட்டத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலாரில் திருவருட்பாவின் அகப்பாடல்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். சென்னை, விலிங்க்டன் சீமாட்டி மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார்.

பணி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார்.

படைப்புகள்


நூலாசிரியர்

1.    பட்டாம் பூச்சிகளின் இரவு – கவிதை நூல்

2.   உச்சிதனை முகர்ந்தால் - கட்டுரைத் தொகுப்பு

3.   பேராசிரியர் அ.மு.ப. - வாழ்க்கை வரலாற்று நூல்

4.  திருஅருட்பாவில் அவன் - அவள் - ஆய்வு நூல்  - கவிதை உறவு பரிசு பெற்றது

5.   காலச்சிற்பி கவிமுகில் (வாழ்க்கை மற்றும் திறனாய்வு நூல்)

6.   உலகைச் செதுக்கிய சிற்பிகள் – தன் முன்னேற்றக் கட்டுரைகள் - இனிய நந்தவனம் பரிசு பெற்றது

7.   அகம் புறம் அவள் – பெண் மையக் கட்டுரைகள்

v மொழிபெயர்ப்பு நூலாசிரியர்

8    பொன் மகுடம் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ச.மோகன் அவர்களின் ஆங்கிலக் கவிதைகளின்  தமிழ் மொழிபெயர்ப்பு


v பதிப்பாசிரியர்

9    திரிகடுகம் – ஆங்கில உரையுடன் சந்தியா பதிப்பகம்

10   காலந்தோறும் தமிழ் - ஆய்வுக்கோவை 1080 பக்கங்கள் (ஆதிரா பதிப்பகம்)

11    வல்லமை தாராயோ - கவிஞர்கள் பலரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு – (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)

12  கொட்டு முரசே என்னும் கவிஞர்கள் பலரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)

13  பாவேந்தர் எனும் யுகப்புரட்சி (கட்டுரைகள் தொகுப்பு)

 

v  ஆதிரா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூல்கள்

 

14  ஒரு காப்பீட்டு முகவரின் கவிதை முகவரி, ஆதிரா பதிப்பகம்

15  தாரை அ குமரவேலுவின் சிந்தனைச் சுடர்கள்

16  ஃபாத்திமா தாமஸ் – நாவல்

17  பாண்டிய நாட்டு இளம் சிட்டுகள் – நாவல்

18  ஹார்மோன்களின் கவிதை

19  மீளுமா மியான்மர்?

20 மதமா? மனிதமா?

 

v  இவரைப் பற்றிய நூல்

21.    (என்னைப் பற்றிய) ஆதிராவின் படைப்புலகம் – ஆசிரியர் கவிஞர் முபீன் சாதிகா கலைஞன் பதிப்பகம்

v  கல்லூரியில் பாடத்திட்டத்தில் – கவிதை

தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை .  மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.


பங்கு பெற்ற கருத்தரங்கங்கள்

 

1.    மலேசியக் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (29.01.2015 – 01.02.2015) அரங்கத் தலைமை வகித்தமை.

2.  ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் காலந்தோறும் தமிழ் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைத்து, நடத்தி 1080 பக்கங்கள் கொண்ட ஆய்வுக்கோவையை ஆதிரா பதிப்பகம் மூலமாக பதிப்பித்து வெளியிட்டமை

3.  மலேயாப் பல்கலைக் கழகமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய உலகக் கவிஞர்கள் மாநாட்டில் ஆதிராவின் படைப்புலகம் (என் படைப்புகள் பற்றி) என்னும் பெயரில் கலைஞன் பதிப்பகம் நூல் வெளியிட்டுள்ளது

4.  மலேயப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் என்னும் 100 பக்க நூல் வெளியிட்டுள்ளேன்

5.  சென்னைப் பல்கலைக்கழகமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் அமர்வுத் தலைமை..

6.   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தேசியக் கருத்தரங்கில் விவேகானந்தர் போற்றும் பெண்ணியம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றியமை

7.  சென்னை, ஆறுபடை வீடு தொழிநுட்பக் கழகத்தில் (விநாயகா மிஷின்ஸ்) நாடக்த்தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரை

8.  கோவை பி.எஸ்.ஜி.கல்வி நிலையங்களின் வானவில் அமைப்பில் உலகுக்கு ஓங்கிய திருமா பத்தினி - சிலப்பதிகாரச் சொற்பொழிவு

9.   மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதுக்கவிதையில் ஒன்பான் சுவை என்னும் தலைப்பில் சிறப்புரை

10. பி.எம்.சி. பொறியியல் கல்லூரியில் எண்ணுவது உயர்வு என்னும் தலைப்பில் சுயமுன்னேற்ற சிறப்புரை

11.  தமிழிசைக் கல்லூரியின் சிறப்புக் கருத்தரங்கில் தொல்காப்பியத்தில் தமிழிசை என்னும் தலைப்பில் ஆய்வுரை

12. மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் மறைமலையடிகளாரின் திருக்குறள் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வுரை

13. சென்னை தமிழ் வளர்ச்சித் துறையில் மெல்லத்தமிழ் இனி வாழும் என்னும் தலைப்பில் கவியரங்கம்,\

14.  சென்னை புத்தகத் திருவிழாவில் சங்க இலக்கியம் பற்றிய சிறப்புரை (புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக)

15.  கோவை புத்தகத்திருவிழாவில் நவின கவிதைகளில் அங்கதம் என்னும்     தலைப்பில் சிறப்புரை.

16.  திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் பெண் என்னும் பேராண்மை என்னும் தலைப்பில் சிறப்புரை

17.  தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணையவழி கவியரங்கில் தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் தலைப்பில் கவியரங்கம்.

18.  டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 30/06/2020 இல் தலைவர் பொறியாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் அவர்களின் பிறந்தநாள் கவியரங்கில் வாய்மை நம்மை உயர்த்தும் என்னும் தலைப்பில் கவிதை.

19.  டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறளும் திருஅருட்பாவும் என்னும் தலைப்பில் சிறப்புரை

20. சென்னை, செயிண்ட் தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின சிறப்புரை

21.  அண்ணா ஆதர்ஸ் மகளிர் கல்லூரியில் நாட்டுப்புறப் பாடல்கள் – சிறப்புரை

22. தேஜஸ் பவுண்டேஷன் – தேவார திவ்யபிரபந்த கருத்தரங்கம் - கனா கண்டேன் தோழி தலைப்பில் உரை

23. வள்ளலார், ஆன்மிகச் சிறப்புரையாக 50 க்கும் மேற்பட்ட மேடைகள்


இன்னும் இவை போல...


பெற்ற விருதுகள்

 

1.   1. ஆதி – யாதுமாகி நின்றாய் சாதனைப் பெண்மணிக்கான விருது – வின்                        தொலைக்காட்சி

2.   2. தமிழ்நிதி விருது – சென்னைக் கம்பன் கழகம்,

3.  3.  பாரதி கண்ட கல்வியாளர் விருது - சென்னை பாரதியார் சங்கம்

4.  4.  பாரதி இலக்கியச் செல்வர் விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

5.   5. அறிவுக்களஞ்சியம் – மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

6.   6. தமிழ் இலக்கிய மாமணி விருது - உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம்

7. மக்கள் கவிஞர் விருது – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை

8.   8. ஒளவையார் விருது – கவிமுகில் அறக்கட்டளை

9.  9. ஸ்ரீசக்தி விருது – லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ்

10.10. பாரதி பணிச்செல்வர் விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

11.   11. பாரதி கவிக்கதிர் விருது – தென்சென்னைத் தமிழ்ச் சங்கம்

12.  12. ஆசிரியர் செம்மல் விருது தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம் 

13.  13. சிலம்பொலி செல்லப்பனார் விருது – அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்

14. 14. சேவைச் செம்மல் விருது - அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம்

15.  15. நல்லாசிரியர் விருது - சென்னை அரிமா சங்கம் -

16.  16. சாதனையாளர் விருது - சென்னை கலை இலக்கியப் பேரவை 

17.  17. கல்வி சாதனையாளர் விருது - காமராஜர் கிராமிய நல அறக்கட்டளை 

18. 18. டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது - குலோபல் எகனாமிக்              ஃப்ராஸஸ் அண்ட் ரிசர்ச் அசோசியேஷன், புது டெல்லி –

19. 19. திருக்குறள் நெறி தொண்டர் விருது – மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

22 20.  பாவேந்தர் பாரதிதாசன் விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

21.  21. கண்ணதாசன் விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

22. 22. கிளாசி விருது (Classy Award) யுனிவர்சல் ஃபெப்கோ ஏற்றுமதி நிறுவனம்

23. 23. ஆன்மிகச் செம்மல் விருது அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம்

24. 24. கவிஞாயிறு தாரா பாரதி விருது – கவிமுகில் அறக்கட்டளை

25.25.  முத்தமிழ் பாரதி’ விருது கவிராசன் தமிழ் மன்றம்

26. 26. சிறந்த கட்டுரையாளர் விருது – குமுதம் குழுமம்)

27. 27. சாதனைப் பெண்மணி 2018 விருது – அஜந்தா பைன் ஆர்ட்ஸ்

28.28.  பகிர்வு விருது – பகிர்வு நவீன கலை இலக்கிய பரிமாற்றம்

2929.  நம்பிக்கை நாயகி – இனிய நந்தவனம், திருச்சி

3030.  மான்புறு மகளிர் – கவிதைச் சிறகுகள் இலக்கிய அமைப்பு

31. 31. சரசுவதி கண்ணப்பன் விருது – பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை, கோவை

32.32.  தமிழ் மாமணி விருது – கவிதை உறவு (மாத இதழ) இலக்கிய அமைப்பு

33.33. தமிழ் ஆளுமை விருது – சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம்

34.34. தமிழ்ப்பேரொளி விருது – தமிழ்க்கூடல் மற்றும் கிருஷ்ணா இனிப்பகம் இணைந்து

 

வலைத்தளங்களின் வழியாக…. விருதுகள்

35. 35. வல்லமையாளர்’ விருது - வல்லமை மின்னிதழ்

3336. சிறப்புக் கவிஞர்’ விருது - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்


இவர் சார்ந்துள்ள அமைப்புகள்

1.    பொதுச்செயலாளர் . ‘அறம்’ தமிழ்ப் பண்பாட்டு மையம்

2.   துணைத்தலைவர் . திலகவதி மோகன் இலக்கிய அறக்கட்டளை

3.   இணைச்செயலாளர் - பாரதியார் சங்கம், சென்னை  (முன்னாள்)

4.   இணைச்செயலாளர் -உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – இந்தியக் கிளை

5.   இணைச்செயலாளர் - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் (முன்னாள்)

6.   இணைச்செயலாளர் - அலையன்ஸ் கிளப்ஸ் ஆஃப் இண்டர்நேசனல் (ALLIANCE CLUBS OF INTERNATIONAL Dist. 160)

7.   ‘நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை’ - சங்க இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளர் (முன்னாள்)

8.   ‘சோழநாடு’, ‘மீண்டும் உயர்வோம்’ மலேசிய மாத இதழ்களில் - உதவி ஆசிரியர் மேனாள்.

9.   முதன்மை ஆசிரியர் - ‘வளரி’ மாத இதழ் (மேனாள்)

10.  கெளரவ ஆலோசகர் . தேசியப் பார்வை - மாத இதழ்

11.   உறுப்பினர் - கலைஞர் நகர் இலக்கிய வட்டம்

12.  உறுப்பினர் - மக்கள் கவிஞர் அறக்கட்டளை

13.  தலைமை நடத்துநர் - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், சமுதாய வளைத்தளம் -. (www.eegarai.net)

14.  நிறுவனர் - ஆதிரா பதிப்பகம்



அச்சு ஊடகங்களில்

குமுதம், குமுதம் ஸ்நேகிதி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் (தொடர்), கல்கண்டு (தொடர்), குங்குமம் தோழி, மங்கையர் மலர், கல்கி , நம் தோழி மாத இதழ் (தொடர்), பெண்மணி மாத இதழ் (தொடர்), சோழநாடு மாத இதழ் (தொடர்), முதுமை (தொடர்), இனிய உதயம், இலக்கியப்பீடம், அலையோசை, மகளிர் முரசு, புதுகைத் தென்றல், கவிதை உறவு, தமிழ் நானூறு, தமிழர் கண்ணோட்டம், மீண்டும் உயர்வோம்,(மலேசிய இதழ்), வளர்நிலா (மலேசிய இதழ்), முதலிய மாத, வார இதழ்களிலும் தினமலர், தினமணி, மாலை முரசு ஆகிய நாளிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுதல்

 

காட்சி உடகங்களில்

         கலைஞர் (என் நேர்காணல்), விஜய் (சிறப்புப் பட்டிமன்றம்), புதிய தலைமுறை (வட்டமேசை விவாதம்), மக்கள் (நேர்காணல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள்), வின் (கருத்துரை, நிகழ்ச்சித் தொகுப்பு, பட்டிமன்றங்கள்), மெகா(பட்டி மன்றம்), தமிழன் (பத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள்), பொதிகை (கருத்துரை, கவியரங்கம், பட்டிமன்றங்கள்) முதலிய தொலைக்காட்சிகளிள், பட்டிமன்றம், கவியரங்கம் கல்வி, பெண்ணியம் தொடர்பான விவாதங்களில் பங்கு பெற்றுள்ளமை.


பொதுப் பணிகள்

 

v  செங்கல்பட்டு மாவட்டம் தண்டறை கிராமத்தில் அமைந்துள்ள தொண்டு நிறுவனத்தோடு இணைந்து இருளர் பழங்குடி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உரைகள், பயிலரங்குகள் வாயிலாக சுகாதாரம், கல்வியின் தேவை, வன்புணர்வு முதலானவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

v  விளிம்பு நிலை மக்களையும் குழந்தைகளையும் சந்தித்து அவர்களிடம் கல்வியின் தேவைக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்

v  இணையப் பயன்பட்டை பெண்களிடம் அறிமுகப் படுத்துதலும் வலைத்தளம், வலைப்பூ நிறுவி அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல்.

v  வலைத்தளங்களில் ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் சார்பாக, கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்கி, பயனுள்ள முறையில் வலையைப் பயன் படுத்தவும் தமிழில் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் ஊக்குவித்தல். (5 முறை போட்டிகள் நடத்தப் பட்டுள்ளன; ரூ 1,50,000 வரை பரிசுகள் வழங்கப் பெற்றுள்ளன.)