Sunday, March 24, 2019

Aathira mullai ( Bhanumathi) ஆதிரா முல்லை - படிப்பும் படைப்பும்

பேராசிரியர். முனைவர் ப. பானுமதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூதகுடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

கல்வித்தகுதி

இவர் தம் பள்ளிப் படிப்பை அன்றைய பெரியார் மாவட்டம் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சலூர் என்னும் சிற்றூரில் பயின்றார். பி. லிட்., எம்.ஏ., எம்.ஃபில். ஆகிய மூன்று பட்டங்களையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையிலும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலையின் பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றுள்ளார். இவர் ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் தம் இளமுனைவர் பட்டத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலாரில் திருவருட்பாவின் அகப்பாடல்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். சென்னை, விலிங்க்டன் சீமாட்டி மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார்.

பணி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார்.

இவர் சார்ந்துள்ள அமைப்புகள்

1.    துணைத்தலைவர் - ‘அன்பகம்’ மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் காப்பகம்
2.    துணைத்தலைவர் . திலகவதி மோகன் இலக்கிய அறக்கட்டளை
3. செயலாளர் - ‘அறம்’ தமிழ்ப் பண்பாட்டு மையம்
4..   இணைச்செயலாளர் - பாரதியார் சங்கம், சென்னை
5.    இணைச்செயலாளர் -உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – இந்தியக் கிளை
6.    இணைச்செயலாளர் - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
7.    இணைச்செயலாளர் - அலையன்ஸ் கிளப்ஸ் ஆஃப் இண்டர்நேசனல் (ALLIANCE CLUBS OF INTERNATIONAL Dist. 160)
8.    ‘நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை’ - சங்க இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளர் (முன்னாள்)
9.    ‘சோழநாடு’, ‘மீண்டும் உயர்வோம்’ (மலேசிய மாத இதழ்) ஆகிய இதழ்களில் - உதவி ஆசிரியர்
10.   முதன்மை ஆசிரியர் - ‘வளரி’ மாத இதழ்
11.  கெளரவ ஆலோசகர் . யாதவர் நியுஸ் மாத இதழ்
12.  ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் – சமுதாய வளைத்தளம் - தலைமை நடத்துநர். (www.eegarai.net) 

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்

நூலாசிரியர்

  1. ஆதிரா முல்லை என்னும் பெயரால் கவிஞராக அறியப்பட்டுள்ள இவர் ‘பட்டாம் பூச்சிகளின் இரவு’ என்னும் தலைப்பில் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். (ஆதிரா பதிப்பகம்)
  2. ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் தலைப்பில் இளைய சமுதாயமான குழந்தைகளின் நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கருவூலமாக ஒரு கடுரைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். (உலகத்தமிழர் பதிப்பகம்)
  3. தாம் பணி புரியும் கல்லூரியின் நிறுவனரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த பேராசிரியர் அ.மு.ப. அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆக்கியுள்ளார் (கலைஞன் பதிப்பகம்)
  4. திருஅருட்பாவில் அவன் - அவள் என்னும் ஆய்வு நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். (மணிவாசகர் பதிப்பகம்)

பதிப்பாசிரியர்

  1. காலந்தோறும் தமிழ் - ஆய்வுக்கோவை 1080 பக்கங்கள் (ஆதிரா பதிப்பகம்)
  2. வல்லமை தாராயோ என்னும் கவிஞர்கள் பலரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூலின் பதிப்பாசிரியர் (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)
  3. கொட்டு முரசே என்னும் கவிஞர்கள் பலரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூலின் பதிப்பாசிரியர் (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)

மொழிபெயர்ப்பு நூலாசிரியர்

  1. பொன் மகுடம் என்னும் மொழிபெயர்ப்பு (முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ச.மோகன் அவர்களின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில்) நூலின் ஆசிரியர்

இவரைப் பற்றிய நூல்

  1. இவரைப் பற்றி கவிஞர் முபீன் சாதிகா ஆதிராவின் படைப்புலகம் என்னும் நூலினை கலைஞன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.(கலைஞன் பதிப்பகம்)

எழுதிக் கொண்டிருக்கும் இதழ்கள்

இவர் குமுதம் குழுமத்திலும் பெண்மணி, சோழநாடு, மகளிர் முரசு முதலிய வார, மாத இதழ்களிலும் தினமலர், தினமணி முதலிய நாளிதழ்களிலும் தம் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வருகின்றார்.

பெற்றுள்ளவிருதுகள்

1. இவரது ஆசிரியப் பணியின் சிறப்பைப் பாராட்டி சென்னை அரிமா சங்கம் இவருக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது
2. காமராஜர் கிராமிய அறக்கட்டளை இவருக்கு ‘கல்விச் சாதனையாளர்’ விருதினை வழங்கி சிறப்பு செய்துள்ளது.
3. சென்னை கலை இலக்கியப் பேரவை இவருக்கு ‘சாதனையாளர்’ விருதினை வழங்கியுள்ளது.
4. சென்னை, பாரதியார் சங்கம் இவருக்கு ‘பாரதி கண்ட கல்வியாளர்’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது.
5. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது
6. உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் இவருக்கு தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான ‘தமிழ் இலக்கிய மாமணி’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்பு செய்துள்ளது.
7. இவரது பொதுப்பணியைப் பாராட்டி அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம் “சேவா ரத்னா’ என்னும் விருது வழங்கியுள்ளது
9. இவரது தனிச்சாதனையையும் மொழி, சமுக, இன நலத் தொண்டுகளைப் பாராட்டி GLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது வழங்கியுள்ளது
10. தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம்  ஆசிரியர் செம்மல் விருது வழங்கியுள்ளது
11. மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் திருக்குறள் நெறி தொண்டர் விருது வழங்கியுள்ளது
12. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கியுள்ளது
13. யுனிவர்சல் ஃபெப்கோ ஏற்றுமதி நிறுவனம் கிளாசி விருது (Classy Award) வழங்கியுள்ளது
14. ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் திறனைப் பாராட்டி அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம் ஆன்மிகச் செம்மல் விருது வழங்கியுள்ளது
15. கவிராசன் தமிழ் மன்றம் முத்தமிழ் பாரதி என்னும் விருதினை வழங்கியுள்ளது
16. பல் துறை சாதனையைப் பாராட்டி அஜந்தா பைன் ஆர்ட்ஸ் சாதனைப் பெண்மணி 2018 விருதினை வழங்கியுள்ளது
தொலைக்காட்சி வழியாக
17. வின் தொலைக்காட்சி சாதனைப் பெண்மணிக்கான ‘ஆதி – யாதுமாகி நின்றாய் விருதினை வழங்கியுள்ளது
வலைத்தளங்கள் வழியாக
18. வல்லமை மின்னிதழ் வல்லமையாளர் விருது வழங்கியுள்ளது
19. ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் சிறப்புக் கவிஞர் விருது வழங்கியுள்ளது
20. மயிலைத் திருவள்ளுவர்த் தமிழ்ச்சங்கம் அறிவுக்களஞ்சியம் 2019 விருதினை வழங்கியுள்ளது

3 comments:

  1. அப்பாடா! எவ்வளவு பெரிய பட்டியல்! க்டைசியாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உங்களை நேரில் பார்த்தபோது இதெல்லாம் ஒன்றுமே இல்லாமல் எவ்வளவு அமைதியாகக் காட்சி யளித்தீர்கள்! வலைப்பதிவுக்கு வர நேரம் கிடைப்பதில்லையோ?

    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. தங்களை அன்று நேரில் சந்தித்த நினைவலைகள் இப்போதும் பசுமையாக......... தாயகம் வரும்போது தெரிவியுங்கள் ஐயா. சந்திக்க ஆவலாய்.

      Delete
  2. Aadhira mullai peiyar Karanam & antha peiyarukuna artham...

    ReplyDelete