












அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில்
அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்!
நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! என்
தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய்!
நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக
மழலை தேன்சிந்துபாடி வந்தாய்!பாழும் தூரம்தான்
என்செய்யும்? பாசத்தைக் கூட்டி விட்டால்
!வாழ்வாய் என்நெஞ்சத்தில்! வாழ்த்துகிறேன்!
உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!
மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!
வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!











