Saturday, May 15, 2010

அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...






அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில்
அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்!
நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! என்
தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய்!


நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக
மழலை தேன்சிந்துபாடி வந்தாய்!பாழும் தூரம்தான்
என்செய்யும்? பாசத்தைக் கூட்டி விட்டால்
!வாழ்வாய் என்நெஞ்சத்தில்! வாழ்த்துகிறேன்!


உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!

மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!

வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!

14 comments:

  1. அருமையான வரிகள் அப்புவை நேசிக்கும் உங்களை தவற விட்டுவிட்டோமே என்று எண்ணத்தோன்றுகிறது

    ReplyDelete
  2. அப்புவை நேசிப்பது உண்மை ஹாசிம்.. ஆனால் நீங்கள் எப்படி என்னைத் தவற விட்டீர்கள்? இல்லையே.. இதயம் கைப்பிடி அளவுதான்...ஹாசிம். ஆனால் அதன் எல்லை கடலளவுக்கும் மேல்.. பரந்து விரிந்தது. உங்களையும் அதே அளவு நேசிக்கிறேன்..உங்கள் அன்பின் ஆழத்தைக் கண்டு அதே அன்பைப் பொழியும் ஆதிரா இவள்...என்றும்...அன்புடன்....

    ReplyDelete
  3. அருமை என் சகோதரனை பற்றிய உங்கள் வரிகள் உண்மையில் சூப்பர் மொத்தத்தில் நாம் எல்லோரும் இப்போது ஒரே குடும்பமாகி விட்டோம்

    ReplyDelete
  4. ஆம் அஜித். நாம் எல்லோரும் இது போலவே என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அஜித்.

    ReplyDelete
  5. அருமையான வாழ்த்துக்கவிதை..!
    அழகுத்தமிழில்...!!

    ReplyDelete
  6. என் அருமை நண்பன் அப்புவுக்காக படைக்கப்பட்ட இக்கவிதையை கண்டு மனம் மகிழ்கின்றேன்... உங்களின் அன்பான இதயத்தையும் அதன் ஆழத்தில் புதைந்திருக்கும் உண்மையான பாசத்தினையும் உங்களின் வரிகளின் வழியே...

    வாழியவே நீவிர் வாழியவே...

    ReplyDelete
  7. மிகவும் சிறப்பாக உள்ளது மேடம் என்ன சொல்ல வார்த்தைகளே வரல மேடம் நன்றி சொல்ல முடிய வில்லை என்றும் உங்கள் அன்பில் வாழும் அன்பு ஜீவன் அப்புகுட்டி.

    ReplyDelete
  8. அழகான வார்த்தைகள் கொண்டு வரணித்த வரிகள் நன்று தங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. அப்புகுட்டி பற்றிய அக்காவின் கவிதை அருமை!!!

    ReplyDelete
  10. மிக்க நன்றி சம்ஸ்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..நலமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete
  11. பாதம் பதித்து கருத்தும் நல்கி என் சிறு குடிலுக்குப் பெருமை சேர்த்த அன்புத் தம்வி சிவாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்... என்றும்..

    ReplyDelete
  12. தொடரும் தங்கள் அன்புக்கும் தொடர்ந்து என் சிறு குடிலுக்கு வந்து கருத்து வழங்கியும், வாழ்த்தியும் செல்லும் தங்கள் போன்றோரின் நட்பு கிடைத்ததில் அகமகிழ்கிறேன் நண்பரே..என்னென்று சொல்ல.. மிக்க நன்றி அண்ணாமலை அவர்களே...

    ReplyDelete
  13. ”அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே” எனும்போது நான் சிறு துறும்பு எப்படி அகப்படாமல் இருப்பேன் வாசன்.. அப்புவின் தங்களின் நம் ஈகரை உறவுகளின் அன்பு மாற்று இல்லாதது..என்றென்று நான் அதற்கு (உறவுகளுக்கு) அடிமையே..அன்போடு வந்து
    //வாழியவே நீவிர் வாழியவே... // என்று வாழ்த்திய தங்கள் அன்புக்குத் தலை வணங்கி..என்று இதே அன்புடன்..

    ReplyDelete
  14. அன்பில் வாழும் ஜீவனுக்கு அன்புப் பரிசு...இது தங்கள் காட்டும் அன்பில் ஒரு சதவீதம் கூட இல்லை அப்பு..விலை மதிப்பு இல்லா உங்கள் அன்புக்கு என்னால் தர முடிந்த சிறு பரிசு இது .. ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியும் அன்பும்..

    ReplyDelete