Sunday, June 20, 2010

முகவரி தந்த தந்தைக்குச் சில வரிகள்....



ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த தய்யோ!

துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
சுடர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!

சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!




இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒலியில், ஒளியில், அனலில், புணலில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.



7 comments:

  1. தங்களது தந்தை பற்றிய கவிதை அற்புதம் தாய் கவிதை படித்தே பழக்கப்பட்ட கண்களுக்கு நல்ல விருந்து

    ReplyDelete
  2. தந்தைக்கு ஒரு மிகச்சிறந்த இரங்கற்பா!
    எனது வருத்தங்களும்!
    (அவசரத்தினால் கவிதையில் சில
    எழுத்துப்பிழைகள் என நினைக்கிறேன்!)

    ReplyDelete
  3. அன்னை பூமி என்றால் தந்தை வானமல்லவா மணிகண்டன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி மணிகண்டன்..

    ReplyDelete
  4. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எல்லாம் ஒரு தாய் மக்கள் போல என் தந்தைக்கு வருத்தம் தெரிவிக்கும் அன்புக்குத் தலை வணங்குகிறேன் திரு அண்ணாமலை அவர்களே...எழுத்துப் பிழையைத் திருத்தி விடுகிறேன்.. உண்மையான உங்கள் அக்கறைக்கு என் அன்பும் நன்றியும்..தொடர வரம் வேண்டிடும்..

    ReplyDelete
  5. கவிதையின் மைய பொருள் பிரிவின் துயரே ஆனாலும் அழகிய வரிகளில் இரங்கற்பா...

    தந்தைக்கு என் சிரந்தாழ்ந்த அஞ்சலி...

    தங்களுக்கு என்னின் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள்...வார்த்தையின் வடிவில்.

    இக்கவிதை எனக்கு மகிழ்ச்சியே... தங்கள் தந்தை பாசத்தினை நாங்கள் அறியும் வண்ணம் இங்கே படைத்திட்டமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  6. சோகத்திலும் சுகம் காண்பதே நோதலும் தணிதலும் இல்லா நம் முன்னோர் பண்பு..என் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அன்பு உடன் பிறப்பு வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி..சூடான கண்ணீர்த் துளிகளுடன்..
    கவிதைக்கும் கருத்து சொன்னமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாசன்..

    ReplyDelete
  7. இக் கவிதையை படித்தப்போது
    மறைந்த என் தந்தையை,
    நினைவு கூர்ந்தேன்!
    அருமையான கவிதை,
    பாசத்தை தமிழில்
    சொல்லும் வரிகள் அருமை!
    உங்க தமிழ் சொல்லும்
    தந்தையின் பெருமை!

    ReplyDelete