Sunday, June 27, 2010

ஊமை உறவு...





காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!




13 comments:

  1. மறுபெயர் மட்டுமே நிழல்... நல்ல கவிதைங்க... ரசிக்கிறேன்...

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பத்மா அவர்களே..

    ReplyDelete
  3. மறு முறையும் வந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி பத்மா..

    ReplyDelete
  4. பாதம் பதித்தமைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி க. பாலாசி அவர்களே.. தஙகள் பாதச்சுவடுகளை என்று எதிர் நோக்கி..அன்புடன்..ஆதிரா..

    ReplyDelete
  5. அவளுடையது என்பதனால் நிழலும் அழகானது...

    உங்களுடையது என்பதனால் நிழலும் உருகொண்டது.

    ReplyDelete
  6. அவளுடைய அழகான நிழலை ரசித்த தங்க்ள் கண்களால் இந்த நிழைலையும் ரசித்துப் பாராட்டியமையில் மனம் மகிழ்கிறது. மிக்க நன்றி.. உங்களுடையது என்பதால் மறுமொழியும் ருசிக்கிறது.

    ReplyDelete
  7. தஞ்சை கோயில்
    கோபுரம் போல
    எனக்குள் மறைகின்றாய்//

    ஆதிரா மிக அழகான வரிகள் திரும்ப சொல்லி பார்க்கிறேன்!

    ReplyDelete
  8. மிக்க நன்றி ரோஸ்.. திரும்பச் சொல்லிப்பார்த்து அதை எழுதிவிட்டும் சென்றமைக்கு..
    தங்களின் வலைப்பதிவைப் பார்வையிட்டேன். மிக அழகாக வடிவமைத்து உள்ளீர்கள். பதிவுகள் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  9. நன்றி ஆதிரா!
    அதை வடிவமைத்த பெருமை என் நண்பனுக்கானது!அவனிடம் சொல்லி விடுகிறேன் உங்கள் பாராட்டை!
    பதிவுகள் பற்றி இன்றைய இடுகை பார்த்து விட்டு சொல்லுங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  10. பெயர் தெரியாத் உங்கள் நணபனுக்கும் என் வாழ்த்துக்கள். நட்பு ஒன்றே நம்மை வாழ வைக்கிறது..உங்கள் பதிவைப் பார்க்க புறப்பட்டு விட்டேன்..நன்றி..ரோஸ்..

    ReplyDelete
  11. நிழல் நிஜமானது,
    உங்கள் கவிதையில்.
    நிழல் உறவானது ,
    உங்கள் தமிழ் நடையில்.
    நிழலுக்கும் ,கவிதை
    உங்களால் மட்டுமே படைக்க முடியும்.
    வாழ்த்துக்கள் தோழியே .

    ReplyDelete