ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, August 3, 2010

நினைவுகளும் சுகம்தான்!!!http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRta4tVc8G_qE2b_QMUKT6gOu7D-oFaH-Y2mwvIxWhZbuNr0Ts&t=1&usg=__ydwqyDt2Qcc5vEWYQbmb3z3nDmY=
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்
என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை 
துளி வேஷம்

உன் சிணுங்களில் 
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள 
முயன்று முயன்று
தோற்ற போது 
நானஅழுவேன்

பாதம் முதல் 
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும் 
இயந்திரமாய் 
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம் 
சுலுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்


நீ  எட்ட நின்றாலும் 
உன்னைத் 
தொட்டுப் பார்த்துச் 
சுகம் கொள்ள 
உன் இதழ் பட்ட 
இடங்கள் என்னிடமே!!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது4 comments:

 1. //உன் சிணுங்களில்
  மெய் சிலிர்ப்பேன்
  உன்னைச் சீண்டும் போது
  மனம் களிப்பேன்// கவிதை அழகு

  ReplyDelete
 2. வழக்கம் போல வந்து வாழ்த்தும் அன்புக்குத் தலை வணங்கி..என்றும் அன்புடன்..

  ReplyDelete
 3. நினைவுகள் அருமையாய்...

  நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....

  ReplyDelete
 4. இனிக்கும் நினைவுகளின் இனிமை தொடர வாழ்த்துக்களும்,
  இனிக்கும் பதிவுகள் என்றும் தொடர விருப்பங்களும்..
  நன்றி வாசன்.

  ReplyDelete