
நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!
காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!
விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!
மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
தெரிந்து கொண்டேன்!
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!