ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, September 28, 2010

மனைவியின் தகுதி
http://t0.gstatic.com/images?q=tbn:875Y1o-MO0YeoM:http://media.picfor.me/0011B45/Woron-stunning-photos-Glamour-Portraits-girl-woman-eye-photo-tear-Fashion-%D1%87%D0%B1-%D1%84%D0%BE%D1%82%D0%BE_large.jpg&t=1

நினைவுக் கோப்பை 
நிறைந்து வழிகிறது 
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும் 
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத 
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
தெரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!


26 comments:

 1. உன் மனைவியின்
  சீதனக் கணக்கைப் பார்த்து
  தெரிந்து கொண்டேன்!

  சரியானான் சாடல்
  வாழ்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி யாதவன். தங்கள் புகைப்படத்தில் சொடுக்கினால் தங்கள் வலைப்பூவுக்குள் புக முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை..காரணம் கூறுங்களேன் யாதவன். இல்லையென்றால் தங்கள் வலைத்தளத்தின் ஐ டி யை முடிந்தால் பதிவிடவும் யாதவன். அன்புடன்...

  ReplyDelete
 3. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேலு ஜி.

  ReplyDelete
 4. காதல் சோகம் கனக்கிறது மனதுக்கு அருமையான கவி அருவி அக்கா நன்றி

  ReplyDelete
 5. பெண்ணின் வலிகளைச் சொல்லும் நல்ல கவிதை.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 6. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 7. அன்பு சுந்தரா,
  முதல் முறையாக என் குடிலுக்கு வருகை புரிந்துள்ளீகள். மிக்க நன்றி. தங்களின் தொடர் வருகையையும் பாராட்டுக்களையும் குட்டுகளையும் இனிதே எத்ர்பார்த்து...அன்புடன்

  ReplyDelete
 8. கிட்டாக் காதலை வெட்டென மறக்கச் செய்யும் மூலிகை இன்னும் முளைக்கவில்லை சோதரி.
  பச்சைக் களிமண்ணை,உயிரையே நீராய்ச் சேர்த்து,மனக்குயவன் வனையும் பொம்மையே காதல். விதிச்சூளையில் சுட்டபின்,அந்த பொம்மை வனைந்தவாறே இருக்க வேண்டியது தான்..
  ஜெயித்தால் கொலுவில்,தோற்றால் பரணில்..

  ReplyDelete
 9. காதலை இதனின் அழகாக வர்ணிக்க இயலுமா? வியப்பாக உள்ளது தங்களின் காட்டு மோகன்ஜி.
  விதிச்சூளையில் வெந்தும் வேகாதும் போகும் ஈசல் வாழ்க்கையில் அதிகமாக ஊசலாடுவது காதல் வாழ்க்கையே என்பதை அழகாகக் கூறிவிட்டீர்கள் ஜி. வருகைக்கும் சிந்திக்க வைத்த கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.

  ReplyDelete
 10. ஏன் ஆதிரா!வானவில் பக்கம் வருவதில்லை.ஏதும் கோபமா?!

  ReplyDelete
 11. // காத தொலைவு போய்வருவாய்
  என்று காத்திருந்த என் கண்களுக்கு
  நீ காதலைத் தொலைத்து விட்டு
  போனது தெரியாமலே போனது!//

  அவளிடம் தொலைத்த காதலை... தொலைவாய் அவன் சென்றிருந்தாலும் வேறு எங்கோ அவன் தொலைக்க வாய்ப்பு இருக்குமோ?

  // விடைகள் சரியாக இருந்தும்
  மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
  காரணம் அறியாமல் பூச்சியமாய்
  போனது என் காதல் பரிட்சையும்!//

  மனதுக்குள் விடை இருந்தும் தேர்வறைக்குள் விடைத்தாளில் எழுத வராத மாணவனின் நிலையாய்... விடைத்தாளில் விடை இருந்தும் மதிப்பு பெறாத நிலையில்...

  கவிதையின் இந்த வரிகளும் வாழ்கை சூழலை சார்ந்து அருமையாக...

  //மறுதேர்வு எழுத
  காதலிலும் கல்யாணத்திலும்
  ஆண்களூக்கு மட்டுமே
  அனுமதி உண்டு!//

  விதியாய் அந்தக்காலம்... நீதியாய் இந்தகாலம்... இன்று எல்லாம் நம் கையில்...

  //அனுமதி கிடைத்தாலும்
  எழுதும் மனநிலையில்
  என்றுமே இல்லாத
  வறண்ட எழுதுகோலாய்
  உலர்ந்த இதயத்துடன்!//

  உலர்ந்த இதயம் மலர்ந்து வாழவும்... வறண்ட எழுதுகோல் கங்கை கொண்டு திரண்ட எழுத்துகளாய் உயிர் பெறவும்... காலம் கண்டிப்பாக உறவு கொடுக்கும் அவர்களுக்கு...

  மனைவியின் தகுதி என்றும் மதிப்பீடு செய்ய இயலாது... அதுபோல் தங்களின் வரிகளையும்...

  ReplyDelete
 12. எல்லா வரிகளும் சிறப்பா இருக்கு குறிப்பா

  //விடைகள் சரியாக இருந்தும்
  மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
  காரணம் அறியாமல் பூச்சியமாய்
  போனது என் காதல் பரிட்சையும்!
  ////

  நல்லாழுத்தமான வரிகளொடு உள்ளது

  ReplyDelete
 13. அனுமதி கிடைத்தாலும்
  எழுதும் மனநிலையில்
  என்றுமே இல்லாத///

  nice

  ReplyDelete
 14. வானவில்லின் வண்ணத்தில் மனம் கொள்ளை போனதால் நாள் தோறும் அதனை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஜி. எப்படி நான் வரவில்லை என்று நினைக்கிறீர்கள். என் சுவடுகள் என்னைக் காட்டிக் கொடுக்க வில்லையா? ஒரு வேளை ஒரு நாள் வராமல் இருந்து இருப்பேனோ? என்றும் வானவில்லின் முதல் ரசிகையாக இவள். இந்த அழைப்புக்கு, எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி ஜி.

  ReplyDelete
 15. அன்பு வாசன்,
  //அவளிடம் தொலைத்த காதலை... தொலைவாய் அவன் சென்றிருந்தாலும் வேறு எங்கோ அவன் தொலைக்க வாய்ப்பு இருக்குமோ?//
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுகிறீர்களா வாசன்?
  //கவிதையின் இந்த வரிகளும் வாழ்கை சூழலை சார்ந்து அருமையாக...//
  தங்களின் பாராட்டுத் தேன்.. சுவை.
  //விதியாய் அந்தக்காலம்... நீதியாய் இந்தகாலம்... இன்று எல்லாம் நம் கையில்.//
  உழையும் உப்பக்கம் காணலாமோ மதியால்?

  //உலர்ந்த இதயம் மலர்ந்து வாழவும்... வறண்ட எழுதுகோல் கங்கை கொண்டு திரண்ட எழுத்துகளாய் உயிர் பெறவும்... காலம் கண்டிப்பாக உறவு கொடுக்கும் அவர்களுக்கு...//
  உங்களைப் போன்ற இளைஞர்கள் நினைத்தால் இது எல்லாம் சாத்தியம் மட்டும் அல்ல சத்தியம்.

  //மனைவியின் தகுதி என்றும் மதிப்பீடு செய்ய இயலாது... அதுபோல் தங்களின் வரிகளையும்...//
  அன்பிற்கு உண்டோ அடைக்கும் இல்லை அளக்கும் கருவி.. அதுதான் இந்தப் பாராட்டு. அன்புக்கு, கவிதை ஆய்வு மதிப்பீட்டுக்கு..அன்பான நன்றி வாசன்.

  ReplyDelete
 16. அன்புள்ள பிரபு,
  முதல் வருகைக்கு முதற்கண் நன்றி.
  கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பிரபு.

  ReplyDelete
 17. அன்புள்ள மங்குனி அமைச்சர்,
  தங்கள் முதல் பாதத்துக்கும் முதல் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி மங்குனி அமைச்சர்.

  ReplyDelete
 18. அருமையான உணர்வு பூர்வமான கவி வரிகள்

  ReplyDelete
 19. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

  ReplyDelete
 20. அன்புள்ள ஆதிரா,
  // அன்பு வாசன்,
  //அவளிடம் தொலைத்த காதலை... தொலைவாய் அவன் சென்றிருந்தாலும் வேறு எங்கோ அவன் தொலைக்க வாய்ப்பு இருக்குமோ?//
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுகிறீர்களா வாசன்?//

  நான் அவ்வாறு சொல்லவில்லை, நான் சொல்ல வந்தது அவளைவிட்டு தொலைவய் அவன் சென்றாலும்... அவள்மீது உள்ள(த்தின்) காதலை அவளிடம் தொலைத்து விட்டு...வேறு எங்கோ இவன் வாழமுடியுமா...உயிரோடு நீயில்லாமல் என்பது சொல்லவந்தேன்... செல்லும் வழியெல்லாம் இவனுக்கு அவள் நினைப்பு... செல்கள் செல்லரித்து போகும்வரை...

  கவிதை ஆய்வோ, மதிப்பீடோ அல்ல... எந்தன் மனத்தின் பார்வைதான்...

  ReplyDelete
 21. மிகவும் அருமையான கருத்தாழமிக்க வரிகள், வாழ்த்துகிறேன் ஆதிரா அவர்களே.

  ReplyDelete
 22. மிக்க நன்றி தயாளன் சார்.

  ReplyDelete
 23. அன்பு வாசன்,
  ஆய்வே நம்மை வளர்க்கும். நன்றி

  ReplyDelete
 24. ஆதிரா மேடம்,

  என்ன சொல்லட்டும் நான்?!!!

  ReplyDelete
 25. என்னைக் கேட்டா.. ஒன்னு நல்லா இருக்குன்னு சொல்லுங்க.. இல்லாட்டி நல்லா இல்லன்னு சொல்லுங்க... ஹா ஹா


  நன்றி கண்ணன்.

  ReplyDelete