Saturday, December 18, 2010

மரபு..



என்னெனவோ
எழுத நினைக்கிறேன்
சமத்துவத்தைப்
புனையத் துடிக்கிறேன்

கடித்துத் துப்பியதில்
நகங்களெல்லாம் கரைந்து
சதைகளே மிஞ்சின

விரல்களில்
கசிந்த இரத்ததைப்
பார்த்த போது
புரிந்தது
கவிதை எழுதுவதைவிட
சமையல் செய்வது
எளிதென்று

மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!

22 comments:

  1. நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜீ

    ReplyDelete
  3. எதார்த்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது

    ReplyDelete
  4. முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன். ,.. கவிதை அருமை

    ReplyDelete
  5. மிகவும் அருமையான கவிதைங்க.. ரொம்ப நல்லாயிருக்கு..

    ReplyDelete
  6. முதல் முறை வருகை புரிந்துள்ளீர்கள் சென்னைப் பித்தன். தங்கள் முதல் வருகைக்கு என் முதல் நன்றி. கருத்துக்கும் இனி வரப்போகும் வரவுக்கும் என் மனமாரந்த நன்றியும் அன்பும்.

    ReplyDelete
  7. அன்புள்ள தமிழ் வினை,
    தங்களின் முதல் வருகையும் முதல் கருத்துரையும் எம் மனதில் தேனாய் இனிக்கிறது. தங்கள் இனிய நட்புக்கு, தங்கள் கருத்துக்கு, தொடர் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. //முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன். ,.. கவிதை அருமை //
    ஆம் LK. ஆனால் நான் தங்கள் தளத்திற்குப் பழையவள். பல முறை வந்துள்ளேன். தங்கள் முதல் வருகைக்கு, முத்தான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. அன்புள்ள பதிவுலகில் பாபு,

    முதல் முதலாக பாதம் பதித்துள்ளீர்கள்.தங்களை வருக வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

    தங்கள் கருத்துரையில் மனம் மகிழ்ந்தது. மீண்டும் நன்றி பாபு.

    ReplyDelete
  10. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  11. முதல் வருகைகும் முதல் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மாதேவி. த்ங்கள் தொடர் வ்ருகையை எதிர் நோக்கி...அன்புடன..

    ReplyDelete
  12. சமைப்பது எளிது, என்னினத்திற்கு வகுத்தது இதுதான் என்று தனக்கு தானே வகுத்துக்கொள்வதும் எளிது...

    நகங்களை கடித்து எறியலாம். ஆனால் அதனை கடந்து தன் விரல் சதைகளை கடித்து இரத்தம் வரும் அளவிற்கு தன்னை மறந்துபோதல் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று...

    சட்டம், வட்டம் என்று தனக்கு தானே வகுத்துக்கொள்வது, தன்னை தானே அழித்து கொள்வதும் போன்று ஆகும்...

    பெண்ணியம் காப்போம்...

    ReplyDelete
  13. அருமையான கவிதை. உங்கள் பக்கத்தை திறந்தால் ஹேங்க் ஆகி விடுகின்றது. சரி செய்யுங்கள் ஆதிரா!

    ReplyDelete
  14. //சமைப்பது எளிது, என்னினத்திற்கு வகுத்தது இதுதான் என்று தனக்கு தானே வகுத்துக்கொள்வதும் எளிது...//

    அதைத்தான் நானும் சொன்னேன்.. எளிது சமைப்பது.

    /நகங்களை கடித்து எறியலாம். ஆனால் அதனை கடந்து தன் விரல் சதைகளை கடித்து இரத்தம் வரும் அளவிற்கு தன்னை மறந்துபோதல் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று...//

    யோசித்ததால் வந்ததுதானே அது!!!!!

    சட்டம், வட்டம் என்று தனக்கு தானே வகுத்துக்கொள்வது, தன்னை தானே அழித்து கொள்வதும் போன்று ஆகும்...

    என்ன செய்வது நண்பா.. பெண்களின் நிலை இன்னும் இப்படித்தானே இருக்கிறது.

    நன்றி..கருத்துக்கு..

    ReplyDelete
  15. எனக்குப் புரியவில்லை நூருல்.. எனன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்..

    நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள்..கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. ஆ! என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. மாறிக் கொண்டே வருகிறது. மாற்றத்திலிருந்து கண்களை அகற்றாமலிருக்க வேண்டும்.

    ReplyDelete
  17. தங்களின் முதல் வருகை இந்த வலைப்பூவுக்குள். ஆம் மாறிக்கொண்டு வருகிறது அப்பாதுரை. தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என் போன்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கிறது. மிக்க நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  18. முதல் முறை வருகிறேன் எதார்த்தமாக கவிதை அருமை

    ReplyDelete
  19. எதார்த்தங்களை சுமந்த வரிகள் வாசிக்கையில் மனம் லேசாகிறது

    ReplyDelete
  20. கணத்த மனத்திலிருந்து வரும் கவிதைகள் கற்பவர்களின் மனத்தை லேசாக்கும் வித்தகம் அறிந்தது. தங்கள் முதல் வருகைக்கு அன்பான மனமலர் தூவி இனிய வரவேற்புகள். நன்றிகள்..மீண்டும் மீண்டும் வருகையையும் மேலான கருத்துரைகளையும் எதிர்நோக்கி..
    அன்புடன்
    ஆதிரா..

    ReplyDelete
  21. சமத்துவம் இருக்கு இந்த உலகில், இருக்கும் இடத்தை தேடி அங்கு உங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்........

    ReplyDelete