Friday, April 1, 2011

“அவன் குடிகாரன்”


எந்தக் கடவுளிடமும்
வரம் ஒன்றும்
கேட்கவில்லை
குடிகாரனாகப்
பிறக்க வேண்டி

 கல்லூரியிலோ
பல்கலைக் கழகத்திலோ
பரிட்சை எழுதி
பெறவில்லை
குடிகாரன்
என்ற பட்டத்தை

கண்டிப்பாக
குடிக்க வேண்டி
நிர்ப்பந்திக்க
காதல் தோல்வியும்
வரவில்லை
கடன் தொல்லையும்
எனக்கில்லை

எந்த மாதுவையும் நான்
நினைத்ததில்லை
அதனால் தானோ
மதுமகள் அன்பாய்
என்னை
அணைத்துக்கொண்டாள்

விலக்க முடியாத
அவள் இரும்புக் கரத்தில்
சிறைபட்டு
தள்ளாடிகொண்டிருக்கிறேன்
“அவன் குடிகாரன்”
என்றநற்சான்றிதழுடன்

நட்புக்குக் துணையாக்
கோப்பைக்குக் கரம் கொடுத்த
ஒரே
காரணத்தால்!!











8 comments:

  1. எப்போதுமே முதல் முறை குடிப்பவன் / புகைப்பவன்
    அவன் செலவு செய்து தொடங்குவதில்லை என்று சொல்லக் கேள்வி. அறியாமையாலும் ஆர்வக்கோளாராலும் ஏறபடும் பழக்கம் உடலையும் ஒருவன் வாழ்க்கையையும் அழித்து விடுகிறது. வேண்டாத பட்டங்களை சுமக்க வைக்கிறது. சிந்திக்கத் தூண்டும் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உடையும் கண்ணாடி கோப்பைக்குள் இருந்துக்கொண்டு... மாதுவாலும் உடைந்த நெஞ்சத்திற்கு மருந்தாய் அமையும் மது...

    சுயநினைவோடு பலர் செய்யும் தவறுகளை காட்டிலும்... சுயநினைவினை மட்டும் இழந்து வாழ்தல் பலநேரங்களில் மனதிற்கு சுகமாய் அமைகின்றது...

    யாரும் முதலில் விரும்பி செல்வதில்லை... இருந்தாலும் ஒருமுறை விரும்பியவரை கைவிடுவதில்லை எந்நாளும்...

    நான் குடிப்பதை நியாயப்படுத்தவில்லை... நானும் ஓர் குடிமகனாய்...

    // நட்புக்கு கம்பெனியாய்
    கப்புக்குக் கரம் கொடுத்த
    ஒரே
    காரணத்தால்!!//

    கப்பு என்பதற்கு பதில் கோப்பையும்...
    கம்பெனி என்பதற்கு பதில் துணையென்று என்றே நீங்கள் இங்கே எழுதியிருக்கலாம் என்பதும், முடிந்தால் திருத்தம் செய்யவும் வேண்டுகிறேன்...

    (என்னை திருத்தம் செய்தது போல்...)

    ReplyDelete
  3. திரு செளந்தர் அவர்களே,
    முதல் முறை வந்திருக்கிறீர்கள்.தங்கள் வரவு நல்வரவு ஆகுக். முத்துக்கருத்துக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. ஜி.என்.பி ஐயா, வணக்கம். இளம் வயதில் ஏற்படும் இந்தப் பழக்கத்தை ஒவ்வொருவர் வழக்கமாக்கிக் கொண்டு தவிக்கின்றனர் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள். நன்றி ஐயா தொடர்ந்து வரும் தங்கள் அன்பான கருத்துரைக்கு.

    ReplyDelete
  5. //சுயநினைவோடு பலர் செய்யும் தவறுகளை காட்டிலும்... சுயநினைவினை மட்டும் இழந்து வாழ்தல் பலநேரங்களில் மனதிற்கு சுகமாய் அமைகின்றது...//

    சுய நினைவு இருக்கும்போதுதானே குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்பரம்தானே நினைவை இழக்கிறார்கள். இது சன்யாசி பூனை வளர்த்த கதைதான்.

    தங்களின் கருத்தை தலைமேல் கொண்டு மாற்றி விட்டேன். மகிழ்ச்சியா..நன்றி

    அது என்ன என்னைத் திருத்தியது போல...

    திருத்துவதற்கு நீங்கள் என்ன விடைத்தாளா!!!!!!!!
    அது உங்கள் அன்பு மனதை அல்லவா காட்டுகிறது.

    ReplyDelete
  6. உண்மைதான். நான் குடிப்பதில்லை என்பதாலேயே என் நட்பு வட்டம் குறைவு.

    ReplyDelete
  7. விடுங்கள் சிவா. நல்ல நட்பு இதையெல்லாம் எதிர்நோக்கி வருவது இல்லை. பிறர் மனதை புரிந்த, சொந்த விருப்பு வெறுப்புகளை தாண்டி, முரணான குணங்களையும் தாண்டி வருவது. நட்புக்கு ஆயிரம் காரணங்கள் போல நட்பு இல்லாமைக்கு இது ஒரு காரணம்.

    ReplyDelete