Saturday, April 16, 2011

முன்னும்..... பின்னும்....

காதலுக்கு முன்....

வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....

காதலுக்குப் பின்...

அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..

18 comments:

  1. அவளின்
    மெளனத்திற்கும்
    நீண்ட உரை
    எழுத முடிகிறது

    இந்த நான்கு வரிகளும் போதுமே நச்சென்று உள்ளது

    காதல் அகராதியில் என்பது சொல்லதேவையில்லை சொல்லாமலே வாசிபவர்களுக்கு புரிகிறது

    ReplyDelete
  2. மெளனத்திற்கும்
    நீண்ட உரை
    எழுத முடிகிறது

    அதுதான் காதல்
    அழகான வரிகள்

    ReplyDelete
  3. அது என்ன அவனுக்கு.? அவளுக்கில்லையா.?

    ReplyDelete
  4. இதுதான் காதலின் முரண்பாடு..

    ReplyDelete
  5. உங்கள் தளம் வண்ணமயமாக அருமையாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. அருமை. முரண்கள் நிறைந்தது தான் காதல்.
    அது சரி ... விடுப்பில் சென்ற நீங்கள் திரும்பி வந்தது எனக்குத் தெரியாமல் போயிற்றே மேடம்.
    என் வலைப் பக்கங்களுக்கு வருகை தாருங்கள் மேடம் .

    ReplyDelete
  7. முதலில் என்னை எல்லோரும் மன்னிக்கவும். இந்தக் கவிதையைச் செப்பனிட்டு படம் தேர்வு செய்து பதிய எண்ணி சேமித்து வைத்திருந்தேன். எப்படி என்று தெரியவில்லை பதிவாகிவிட்டது. எட்டு பின்னூட்டங்கள் வந்தபின் அதனை அழிப்பது முறையல்ல. அப்படியே இருக்கட்டும்.

    அன்பு யாதவன்,
    தாங்கள் கூறியபடி மாற்றி அமைத்து விட்டேன். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி யாதவன்.
    இருமுறை வந்தமைக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  8. ஜி.என்.பி ஐயா.. அவளுக்கும்தான்... இருந்தாலும் பெணகள் காதலை முன்மொழிவது இலக்கண முரண் இல்லையா... இதுவும் சும்மாதான்..
    அன்பான க்ருத்துக்கு மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  9. பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி வெங்கட்நாகராஜ்

    ReplyDelete
  10. பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி நாகசுப்ரமணியன் அவர்களே

    ReplyDelete
  11. மிக்க நன்றி செளந்தர். கவிதை வீதியில் உலா வந்தேன்.. இதமாக....புத்துணர்வுடன் திரும்பினேன்..

    ReplyDelete
  12. அன்பு சிவகுமரன்,
    நான் இன்னும் முழுமையாகத் திரும்பி வரவில்லை.இதுவும் ஒரு விபத்து. ஏதோ வேகத்தில் வலைப்பூவைப் பார்த்தேன். கை தவறிய ஒரு கவிதை அதில் எட்டு பின்னூட்டங்கள்.. அசந்து போனேன்.
    விரைவில் வருகிறேன் சிவா.

    ReplyDelete
  13. இப்போதும் அவசரத்தில் ஒரு நன்றி கூட கூறாமல் போகிறேன் பாருங்கள் சிவா. வருகைக்கு உங்கள் இல்லத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கும் மனமார்ந்த நன்றி சிவா.

    ReplyDelete
  14. #// கவிதை வீதி # சௌந்தர் said...

    உங்கள் தளம் வண்ணமயமாக அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி செளந்தர். உங்கள் தளமும் தான்...

    ReplyDelete
  15. மௌனத்திற்கு உரை எழுதும் முரண்பாடுகளின் மொத்த வடிவம்.

    ReplyDelete
  16. அன்பு இராஜராஜேஸ்வரி,
    முதன்முறை வந்துள்ளீர்கள். தங்களுக்கு இனிய வரவேற்பு. காதல் என்பதே முரண்பாடுகளின் மொத்த உருவம் அல்லவா.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    ReplyDelete