உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை
உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்
ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று
உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என்
வாழ்வின் எல்லை வரை!
ம்ம்ம்
ReplyDeleteஉணர்வுபூர்வமான வரிகள்
வாசிக்கையில் ம்ம்ம் வார்த்தைகள் இல்லை
ம்ம்ம்ம் வாருங்கள் செய்தாலி. நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன்.(எழுத்தில்) நலமாக உள்ளீர்களா?
ReplyDeleteஉடனடியாக வந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி.
தலைப்பே கவிதையாய் ... பல செய்திகளை சொல்கிறது.
ReplyDelete\\உன் பயணத்தில் என் வாழ்வின் எல்லை-///
அருமையான வரிகள்.
இந்தக் கவிதை சம்பந்தப்பட்ட அந்த இருவருக்கும் நமக்குப் புரியாத பல உணர்வுகளைச் சொல்லும்.
மிக்க நன்றி சிவா. புரியாத புதிர்தான் மனம்.
Deleteநலமா ஆதிரா மேடம்?
ReplyDeleteநினைவிருக்கிறதா என்னை ?
என்ன சிவா இப்படி கேட்டு விட்டீர்கள்? நான் என்னை மறந்தால் உங்களையெல்லாம் மறக்கலாம். வலைப்பூக்களின் பக்கமெல்லாம் வந்து நெடு நாட்கள் ஆயிற்று. பணிச்சுமை. மன்னிக்கவும். வருகிறேன்.
Deleteஎன்னை
ReplyDeleteதாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
நிலவாய் முகம் காட்டி மகிழவைத்த வரிகள்.. பாராட்டுக்கள்..
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
Deleteநானும் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லை. அதனால் தான் அந்தக் கேள்வி. மன்னிக்கவும்
ReplyDeleteநானும் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லை. அதனால் தான் அந்தக் கேள்வி. மன்னிக்கவும்
ReplyDeleteஅக்கறையாகக் கேட்டதற்கு ஏன் மன்னிப்பெல்லாம். மகிழ்ச்சிதான். மீண்டும் கலந்து மகிழும் காலம் வரும். காத்திருப்போம் அதுவரை.
ReplyDelete