Thursday, May 24, 2012

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!




தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும் 
குருதியில் வளராத
இரத்த உறவே


முந்நூறு நாட்கள்
கருவறை தவம் 
செய்யவில்லை
மூன்றே நொடியில்
முழுவதுமாக
முத்துப் பிள்ளையை
ஈன்றெடுத்த 
நிகழ் யுகக் 
குந்தி நான்


அவளைப் போல
எவரும அறியாமல்
பெட்டியில் வைத்து
நதி நீரில் விட்டுவிட
நான் தயாரில்லை


நீ மட்டுமே அறிய
மனப்பெட்டியில்
உனை வைத்து
அடை காக்கிறேன்
என் நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்



7 comments:

  1. தொப்புள் கொடியில் பூக்காத மலர்
    ஏக்கச் சூட்டில் அடைகாத்தல் - அழகிய படிமங்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  3. முந்நூறு நாட்கள்
    கருவறை தவம்
    செய்யவில்லை
    மூன்றே நொடியில்
    முழுவதுமாக
    முத்துப் பிள்ளையை
    ஈன்றெடுத்த
    நிகழ் யுகக்
    குந்தி நான்

    சிறந்த வரிகளால் ஆன கவிக்கும் கவிக்குரியோ(ள்)ர் ஆதிரா முல்லை உங்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முதலில் என் வலை இல்லம் வந்துள்ளீர்கள் முனாஸ். வருக வருக.. இந்தாங்க சூடா தேநீர் அருந்துங்கள்.

      குளிர்ச்சியாக கருத்துரை வழங்கி இருக்கிறீர்கள். வருகை, கருத்து இரண்டுக்கும் நன்றி முனாஸ்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உன் கருவில் கருவுற்ற வரிகள் என் நெஞ்சத்து
    ஏக்கச் சூட்டில் புதுமலராய்

    ReplyDelete
    Replies
    1. கவிதையாய் கருத்து... நன்றி கலைநிலா.

      Delete