Sunday, December 30, 2012

முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு

ஆய்வாளரையும் (என்னை) ஆய்வுத்தலைப்பையும் அறிமுகப்படுத்தி வரவேற்புரை வழங்குகிறார் நெறியாளர், என் மதிப்புக்குரிய பேரா.முனைவர். சா.வளவன், (ப.நி.) , தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி. சென்னை.

 தலைமை உரை ஆற்றுகிறார் பேரா. முனைவர். அனுராதா, 
துறைத்தலைவர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி.

ஆய்வாளர் (நான்) ஆய்வுரை

ஆய்வுரை

வினாக்கள் தமிழ்த்துறைத் தலைவரிடமிருந்து

வினாக்கள் பார்வையாளர்களிடமிருந்து 

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

புறத்தேர்வாளர் வினாக்களைத் தொடுத்து, துளைத்தெடுத்தல்

புறத்தேர்வாளர்களின் அறிக்கையை வாய்மொழித்தேர்வாளர் முனைவர். அரங்க. இராமலிங்கம், துறைத்தலைவர் (பொ), மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் வாசித்தலும்

 புறத்தேர்வாளர்கள் மூவரின் அறிக்கையின் அடிப்படையிலும், என் ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் பார்வையாளர்களின் வினாக்களுக்கு ஆய்வாளர் விடை பகர்ந்ததன் அடிப்படையிலும் முனைவர் பட்டம் வழங்க பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துறை செய்தல்


பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்

பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்
கவிஞர். நெல்லை இராமச்சந்திரன், பேரா.முனைவர். மைதிலி வளவன், முன்னைத் தமிழ்த்துறைப் பேரா. பச்சையப்பன் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவருடன் நான்
 
பார்வையாளர்கள்
கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

என் உடன்பிறப்பு (தங்கை)

முனைவர் பட்ட ஆய்வாளர் சுந்தர், மற்றும் பேரா.முனைவர்.சேதுராமலிங்கம்

கடந்த 28.12.12 வெள்ளியன்று என் முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித்தேர்வு நடைபெற்றது.

நெறியாளராக ஆய்வை அழகுற நெறிப்படுத்திய, பெருமதிப்பிற்குரிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர், முனைவர். சா. வளவன்  அவர்களுக்கும்,
புறநிலைத் தேர்வாளர், சென்னைப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் டாக்டர் அரங்க. இராமலிங்கம் அவர்களுக்கும்,
தலைமையேற்று நடத்திய பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அனுராதா அவர்களுக்கும் மற்றும்
முனைவர், திருமதி. மைதிலி வளவன்
முனைவர். சேதுராமலிங்கம்
முனைவர். அர்த்தநாரிசுவரன்
முனைவர். திருநாவுக்கரசு
முனைவர். திருமதி.  உமா பார்வதி
கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்
மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

16 comments:

  1. உங்களுக்கும் உங்கள் அன்புக் குடுமபத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதன் முதல் புத்தாண்டு வாழ்த்தை கையிலேந்தி வந்திருக்கும் ஆத்மா. வருக! வருக! தங்களது வாழ்த்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். தொடர்வோம்..நட்பை இனிமையாக..

      Delete

  2. HAPPY NEW YEAR. WHEN WILL THEY GIVE YOUR MUNAIVAR PATTAM.?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      WHEN WILL THEY GIVE YOUR MUNAIVAR PATTAM.?

      அன்றே முனைவர் என்று அறிவித்து வாழ்த்து சொல்லி விடுவார்கள். பரிந்துரை என்பதே அறிவிப்புதான். அறிவித்து விட்டார்கள். திங்கள் செவ்வாய் ப்ரொவிஷனல் தருவார்கள்.
      பட்டம் கான்வகேஷன் (பட்டமளிப்பு விழா) அன்று கொடுப்பார்கள்.

      Delete
  3. முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு - வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  4. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கவிஞர் கி. பாரதிதாசன்.
      தொடர்வோம் இனிமையான தமிழ் நட்பை

      Delete

  5. வணக்கம்!

    ஆதிரா மின்வலையை அன்புடன் இன்றுநான்
    ஓதி மகிழ்ந்தேன் உளம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாரதிதாசன் அவர்களே.

      Delete
  6. மிக்க மகிழ்ச்சி... பெற்ற முனைவர் பட்டம் இவ்வையகம் சிறக்க இறைவன் அருள் புரியட்டும்...

    தொட்டு பறிக்கும் தூரத்தில் கனியாய் பட்டம் இருந்தபோதும்... தொடவிடாமல் காலம் தடைகள் செய்தபோதும்... தூங்கும் தூக்கத்தில் கண்ட கனவில்லை... துடிக்கும் இதயத்தில் கொண்ட கனவு என்ற முனைப்போடு... வாழ்க்கைச்சூழல் தந்த துக்கங்களையும் தவிடு பொடியாக்கி எங்கோ சேமித்து... வெற்றி கனியை அடைந்தது நீங்கள்... அதன் சுவையை சுவைத்த மகிழ்ச்சியில் நாங்கள்...

    என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. துவண்டபோதெல்லாம் நீங்களெல்லாம் கொடுத்த உற்சாகம்தான் முதல் காரணம் வாசன். இந்த வெற்றியில் உங்க்ள் எல்லோரின் பங்கும் அடக்கம். மகிழ்ச்சியில் நீங்கள் இருப்பீர்கள் என்பதும் நானறிந்ததே. மிக்க நன்றி வாசன்.

      Delete
  7. முனைவர் ஆதிரா முல்லை அவர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் தமிழ்ப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  8. Replies
    1. மிக்க நன்றி சமுத்திரபாண்டியன் அவர்களே

      Delete
  9. மிக்க நன்றி முனைவர் அண்ணாகண்ணன் அவர்களே. வலைப்பக்கம் வருவதே இல்லை. மூன்று வருடம் கழித்து நன்றி கூறுகின்றேன். அவ்வளவு வலியுடையது முனைவர் பட்டம். மீண்டும் நன்றி

    ReplyDelete