சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள்
சிவப்பு விழிகள்
கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை
குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை
இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்
அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து
தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்
vethanaiyaanathu ....
ReplyDeletepadam nenjai arukkirathu ...
உள்ளது உள்ளபடி. நன்றி சீனி
Delete
ReplyDeleteவணக்கம்!
பச்சை விளக்கெனப் பாடிய சொற்களை
உச்சிமேல் கொண்டேன் உவந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
குறளால் வாழ்த்தியமைக்கு நன்றி கவிஞர் பாரதிதாசன் அவர்களே.
Deleteபச்சையும் சிவப்பும் கலந்து
ReplyDeleteதந்த கவிதை சிறப்பு
நன்றி கவியாழி கண்ணதாசன் சார்
Deleteஇந்த நிலைமை யாருக்கும் இருக்கக் கூடாது...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
Deleteகொடுமை..... பல குழந்தைகள் இப்படியான நிலைக்குத் தள்ளப்படும் கொடுமை....
ReplyDeleteஆமாம் வெங்கட். வருகைக்கு நன்றி
Deleteபலர் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தற்குரியது... தங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது... கருத்தும் நிறைந்துள்ளது... சமுதாய அக்கறை...
ReplyDeleteவாழ்த்துகள்...
மிக்க நன்றி இரவுப்புன்னகைக்கு
Deleteஉரிய சொற்கள், உருக்கமான உணர்வைத் தந்தன. வாழ்த்துக்கள். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
ReplyDeleteமுதல் வருகைக்கும் அழகான தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிஞர் இராய. செல்லப்பா அவர்களே.
Delete