Saturday, July 6, 2013

பச்சை விளக்கு


சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள் 
சிவப்பு விழிகள்

கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை

குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை

இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்

அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து

தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்


14 comments:

  1. vethanaiyaanathu ....

    padam nenjai arukkirathu ...

    ReplyDelete
    Replies
    1. உள்ளது உள்ளபடி. நன்றி சீனி

      Delete

  2. வணக்கம்!

    பச்சை விளக்கெனப் பாடிய சொற்களை
    உச்சிமேல் கொண்டேன் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. குறளால் வாழ்த்தியமைக்கு நன்றி கவிஞர் பாரதிதாசன் அவர்களே.

      Delete
  3. பச்சையும் சிவப்பும் கலந்து
    தந்த கவிதை சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன் சார்

      Delete
  4. இந்த நிலைமை யாருக்கும் இருக்கக் கூடாது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  5. கொடுமை..... பல குழந்தைகள் இப்படியான நிலைக்குத் தள்ளப்படும் கொடுமை....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட். வருகைக்கு நன்றி

      Delete
  6. பலர் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தற்குரியது... தங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது... கருத்தும் நிறைந்துள்ளது... சமுதாய அக்கறை...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இரவுப்புன்னகைக்கு

      Delete
  7. உரிய சொற்கள், உருக்கமான உணர்வைத் தந்தன. வாழ்த்துக்கள். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் அழகான தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிஞர் இராய. செல்லப்பா அவர்களே.

      Delete