Wednesday, July 24, 2013

அம்மா



கோலம் போட
புள்ளி 
வைத்த போதெல்லாம்
முந்தானையைப்
பிடித்துக் கொண்டு
நின்றிருந்த
என் உள்ளத்தில்
குறிக்கோள்களை
அள்ளி
வைத்தவள் 

அம்மா



11 comments:

  1. அருமை...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாக அறிமுகம் செய்துள்ளார்கள்.

      தகவலுக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. அருமை....

    எம்.எஸ். அவர்களின் படமும் நன்று..... நீண்ட நாட்களுக்குப் பின் அவரது இப்படத்தினைப் பார்க்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. படத்தைப் பார்த்ததால்தான் எனக்கும் கவிதை இப்படிக் கிறுக்கத் தோன்றியது

      Delete

  4. அம்மாவைப் பற்றிய நினைவும் சிந்தனையும் கொண்ட உங்கள் மேல் பொறாமை ஏற்படுகிறது. ( என் இள வயதிலேயே அன்னையை இழந்தவன் என்பதால் )

    ReplyDelete
    Replies
    1. ஜி.எம்.பி. ஐயா,

      “தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா”
      எனக்குத் தாயாக மாறத்தோன்றுகிறது.

      Delete
  5. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
    தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
    இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete
    Replies
    1. //(1) ஆதிரா முல்லை !
      இதமாய் கவிதை வரிகளினால்
      எம் இதயம் மகிழப் பொருளுரைப்பார்
      அழகாய் கவிதை வடிக்கும் இனிய
      ஆதிரா என்னும் அழகிய முல்லை ...!!
      துயரம் தழுவிய போதினிலே மனம்
      துவண்டு வந்த வரிகளைப் பார் .......!!!!
      (மரபுக் கவிதையாலும் எம் மனங்களில் நிற்கிறார் ...!! )//


      எவ்வளவு அழகான அறிமுகம். கவிதை கவிதயைப் பாராட்டுகிறது. அழகிய கவிதை தோழி. என் வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்திய தங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete