ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, January 26, 2016

மர்மமென்ன?
வார்த்தை வலை வீசி
வன்முறைகள் பல கூட்டும் 
கலிங்கத்துப் பரணியின்
கடை திறப்புக் காதை
அல்ல
அவன்
மோன மொழி பேசி
ஊனை உருகவைக்கும்
ஓசை இல்லா
திருவாசகம்
காலை ஒருகூடல்
மாலை மறுகூடலென
காமக் கவி பாடும்
முக்கூடல் பள்ளு
அல்ல
அவன்
இன்ப வேள்வியிலும்
துன்பம் சூழ்கையிலும்
அத்வைதம் ஆகிவிடும்
திருக்கோவையார்
சிற்றின்பக்
கதை எல்லாம்
சிலாகித்துச் சொல்லும்
குறுந்தொகை அல்ல
அவன்
பேரின்ப உலகுக்கு
சேரும்
கதை சொல்லும்
பெரிய புராணம்
காதல் தேவாரம்
அவன்
காதில் படிக்கையிலே
சாதல் போலின்பம்
கொண்டதெந்தன்
ஆவியெலாம்
இன்ப இலக்கியமே
இமைவிளிம்பில்
அவன் படித்தான்
பரணிப் பறையாக
மாறியதன்
மர்மமென்ன?

2 comments:


 1. "மோன மொழி பேசி
  ஊனை உருகவைக்கும்
  ஓசை இல்லா
  திருவாசகம்" என
  அருமையாகச் சொன்னீர்


  மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
  http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம்

  ReplyDelete