ஆதிக் கவிஞன் ஐயன் திருவள்ளுவரை அன்மைக் கவிஞன் கவிப்பேரரசு அவர்களோடு சேர்ந்து வணங்கிய தருணம்.
பெசண்ட் நகரில் கவிப்பேரரசு அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில்.......
பொன்னாடை அணிவித்து கவிப்பேரரசு அவர்களின் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அவர்களைப் பற்றி நான் எழுதிய நூலோடு மற்ற நூல்களையும் தந்த நேரம்.
பேராசிரியர் அ.மு.ப. என்னும் நூலைப் பார்த்தவுடன் “ஏன்பா தமிழுக்கு வந்தே என்று என்னை கேட்டார் என் பேராசிரியர். என் எம். ஏ. எனக்கு வகுப்பு எடுத்தார் மிகவும் அன்பானவர்” என்று பூரிப்புடனும் புன்னகையுடனும் கூறிப் பெற்றுக்கொண்டார்..
மறைந்த நீதியரசர் மோகன் அவர்களைப் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது இழப்பு இலக்கியத்திற்குப் பேரிழப்பு என்று வருத்தம் தெரிவித்தார்.






வழக்கம் போல ஒளிப்பட அழகு நம்ம...... கோபிநாத்
நன்றி
No comments:
Post a Comment