மு.பா. பாபு (சன்மார்க்க நேசர் மு.பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர்) நடத்திய வள்ளலார் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். (வள்ளலார் மஹோத்சவம்) காலை முதல் மாலை வரை நிகழ்ந்த விழாவில் பிற்பகல்தான் செல்ல முடிந்தது.
பசி ஆற்றுவித்தலை, சாதி ஒழிப்பை, மத ஒற்றுமையை, பெண் கல்வியை, திருக்குறள் பயிற்சியை, வள்ளுவர் சொன்ன மது உண்ணாமையை புலால் மறுத்தலை என்று இப்போது பரவலாகப் பேசப் படும் கருத்துகளை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் புரட்சித் துறவி வள்ளலார். பெரியார் வள்ளலாரின் பாடல்களில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து பதிப்பு செய்து இலவசமாகப் பொது மக்களுக்கு வழங்கியுள்ளார்.
சொல்லாமல் கொள்ளாமல் திடீர் என்று மேடை ஏற்றி விட்டு விட்டார். அதுவும் நன்றாகவே இருந்தது.
என் நூலையும் வழங்கினேன்.நிறைவாக கழிந்த பயன் நாள் இது


No comments:
Post a Comment