ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Friday, April 30, 2010

அடுத்த கவலையை...

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!


6 comments:

 1. வடிந்த பின்பு
  அமைதி அடைந்த
  ஆழ்மனக்கடல்
  மீண்டும்
  அடுக்கத்தொடங்கியது
  அடுத்தக் கவலையை!


  இது தான் மனதின் விசித்திரம்
  அழகா வந்துருக்குங்க கவிதை

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பத்மா...

  ReplyDelete
 3. இந்த கவிதை எல்ல மனிதனுக்கும் பொருந்தும் அழகான கவிதை

  ReplyDelete
 4. மிக்க நன்றி மணிகண்டன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 5. அருமை மேடம் உங்களின் கவிதை

  ReplyDelete
 6. மிக்க நன்றி சம்ஸ்..உங்களின் உள்ளார்ந்த அன்பு கருத்துக்கு..

  ReplyDelete