களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!
பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!
நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!
முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!
எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!
நாற்காலின்னு அலங்கார ஸ்டூல் படம் போட்ருகேன்னு யோசிச்சேன் .ஒ அதும் நாற்காலி தானே !
ReplyDeleteநாலு காலு இருக்கே.. கருத்துதான் அழகா இல்லன்னாலும் காட்சியாவது அழகா இருக்கட்டுமே... தஙகள் முதல் கருத்துக்கு நன்றி பத்மா.. உங்க படத்தை மாத்திட்டீங்க..
ReplyDeleteநாற்காலிக்கான உங்க
ReplyDeleteகவிதை பிரமாதம்!!!!
வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ந்ன்றி அண்ணாமலை அவர்களே...
ReplyDelete