Saturday, October 16, 2010

என் இரவு நண்பன்......






இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீரிக் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முனுமுனுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
ம்கிழ்ச்சிக் பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேணும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிராவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?

 

17 comments:

  1. நான் பரவசமடைந்த கவிதையக்கா
    அருமையாக ஒப்பு வித்தீர்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை அழகாயிருக்கிறது..

    ReplyDelete
  3. நல்லாஇருக்குங்க

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்..

    ReplyDelete
  5. மிக்க நன்றி ரியாஸ். சென்ற முறை தாங்கள் வந்தபோதே தங்கள் வலைப்பூவின் முகவரி கேட்டு இருந்தேன். பதியவில்லையே ரியாஸ்..ஏன்?

    ReplyDelete
  6. வந்தது, கருத்து சொன்னது இரண்டுக்கும் மிகவும் நன்றிங்க பதிமா.

    ReplyDelete
  7. ஹேய் தலையணையை வைத்து ஒரு கவிதை அழகு..

    சில இடங்களில் வெட்கப்பட்டு ரசிக்க முடிகிறது ஆதிரா!

    ReplyDelete
  8. பார்ரா..பார்ரா... வெட்கம்...ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (சும்மா வெளாட்டுக்கு....)

    நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள் வசந்த். என்ன கோபம் என் மீது? நலமா வசந்த்?
    கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி வசந்த்.

    ReplyDelete
  9. // கட்டில் போரில்
    ஆயுதமாகவும்
    கேடயமாகவும்
    அவதரிப் பதனால்
    ஆண்மை கொள்வாயோ?//

    இவன் இங்கே ஆண் என்றால்...

    தாயின் மடியும் அவளே.... தாரத்தின் மடியும் அவளே... இங்கே பெண் இவள்...

    தலையணை... பெண்பாலா? இல்லை ஆண்பாலா?

    அவள், என்னருகில் இல்லாத போது அவளாக உருமாறி எனக்கு துணை ஆகுகின்றாள்...

    நான், அவளருகில் இல்லாத போது நானாக உருமாறி அவளுக்கு துணை ஆகுகின்றாள்...

    இரவில் மட்டுமல்ல எப்பொழுதிலும்...

    கவிதையை பற்றி ஆய்வு கட்டுரை எழுத நினைத்தாலும் சற்று ஓய்வாக பின்னூட்டம் மட்டும் இங்கே...

    என் இரவு நண்பன் என நீங்கள் சொன்னதனால் ஆணாகி போனான்... ஆனால் என்றும் தானாக மாறாத ஆணாய் உடன் இருப்பான் காலம் முழுவதுடன் உங்களுடன்...

    மிகவும் அருமை உங்கள் இரவு நண்பன்... அவனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. உங்களின் தலையணைக் கவிதை அருமை!

    ReplyDelete
  11. //அவள், என்னருகில் இல்லாத போது அவளாக உருமாறி எனக்கு துணை ஆகுகின்றாள்...

    நான், அவளருகில் இல்லாத போது நானாக உருமாறி அவளுக்கு துணை ஆகுகின்றாள்...//

    இது போல சிந்திக்க வாசன் என்ற இளைஞரால்தான் முடியும். என் நண்பன் (தலையணை) பற்றி தங்கள் வலைப்பூவில் இரண்டு கவிதைகள் படித்துள்ளேனே. அழகாக..

    தலையணை பெண்பாலருக்கு ஆண்பால். ஆண்பாலல்ருக்கு பெண்பால். என்று எதிர் பாலினத்திற்கு ஈர்ப்பு அதிகம் அல்லவே.
    நன்றி வாசன் பெரிய அழகான பின்னுட்டத்திற்கு..

    ReplyDelete
  12. அன்புள்ள ஜி,
    தங்களின் ஒற்றை வரி பாராட்டும் சுற்றிலும் இன்பம் பரப்புகிற்தே வலைப்பூவில்..மணப்பூவாய்.. மிக்க நன்றி..ஜி.

    ReplyDelete
  13. யையையையை... துணிச்சலான வரி.
    >>சிவப்பு முக்கோணம்
    செய்யும் வேலையைச்

    ReplyDelete
  14. மிக்க நன்றி அப்பாதுரை..

    ReplyDelete
  15. மனிதனின் உள்ளத்தை,
    உரிதுக்கட்டும் கவிதை இது.
    உள்ளதை உள்ளப்படி
    உணர்ச்சியோடு சொல்லும்.

    ஆதிரா என்றால்,
    கவிதை என்று பொருள்
    என்று கூறும் ,மறுமொழிக்
    கவிதை இது.

    தாம்பத்தியத்தை,தவறு
    வாராமல்,தடுமாறாமல்,
    தவமாய் சொன்ன கவிதை இது!
    வாழ்த்துக்கள் தோழியே!
    இன்னும் தொடரட்டும்!

    ReplyDelete