ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Friday, November 26, 2010

தொடரும் சிறை வாசம்....







காற்றில்லா கூட்டுக்குள்
மெட்டில்லா
மெளனப் பாட்டுக்குச்
சிட்டாக ஆடிவரும்
வெண்ப் பட்டுப்பாவைக்கு
நன்பாட்டு ஒன்றிசைக்க
என்றெவர்தான் வருவாரோ?


*****


அன்பு கறைபட்ட போதும்
துன்பச் சிறை பட்ட போதும்
இன்பம் பிறர்க்கென்று ஓதும்
வேதம் அதுதானே 
'பெண்மை'


*****



13 comments:

 1. காற்றில்லா கூட்டுக்குள்
  மெட்டில்லா
  மெளனப் பாட்டுக்குச்
  சிட்டாக ஆடிவரும்
  வெண்ப் பட்டுப்பாவைக்கு
  நன்பாட்டு ஒன்றிசைக்க
  என்றெவர்தான் வருவாரோ?


  வருவார் வருவார்

  ReplyDelete
 2. கண்டுகொண்டதற்கும், நன் மொழியொனறைத் தந்து சென்றதற்கும் மிக்க ந்ன்றி யாதவன்.

  ReplyDelete
 3. 'பெண்மையின் வேதம்' சுவை. பொம்மையின் ஆதங்கம் ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
 4. துன்ப சிறையை பொடிப்பட செய்து அவனின் இதய சிறைக்குள் அடைத்து. பிறர் அன்பின்பால் இருக்கும் கறைகளை நீக்கி தன் அன்பினால் குறையேதும் இல்லாது நிறையாய் மாற்றி... பாட்டுக்கு உயிர்கொடுக்கும் இசை போன்று... நன்பாட்டு கேட்கும் பாவைக்கும் உயிர் கொடுக்க இறைவன் ஒருவனை இனி புதிதாய் படைக்க போவதில்லை... பிறந்திருப்பான்... பெண்மையின் வேதத்தை எக்காலமும் தனக்கென மாற்றிக்கொள்ள வருவான்... இன்பத்தை அவனும் அள்ளித்தருவான் அப்பாவைக்கு...

  வரிகளின் வழியும், பாவையின் வழியும் பெண்களின் மன உணர்வினை அழகாக படத்தோடு பாடமாக காட்டீயுள்ளீர்கள்.... கவி நன்று...

  ReplyDelete
 5. காற்றில்லா கூடேன்ற
  கவலைவேண்டாம்
  வென்சிலையே
  யாரும் குடியேறா
  மனச்சிறையில்
  இடம் கொடுத்து
  சுவாசம் உள்ளவரை
  சுமப்பேன் வாவெளியே
  என் சுவாசம் பட்டாலே
  சுக்குநூறாகும்
  கண்ணாடிக்கூடு
  கவலை என்னவென்றால்
  காயம் படாமல்
  உன்னை சிறைமீட்க்க
  வழி தேடுகிறேன்..........

  ReplyDelete
 6. விளையாட்டுக் கவிதைக்கு வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி அப்பா ஜி

  ReplyDelete
 7. படத்துக்குக் கவி எழுதச் சொன்னேன்.. அழகாக எழுதி நான் கிறுக்கியதற்கும் வந்து வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி வாசன்.

  ஆம் பாவைக்கு உயிர் கொடுக்க இனி ஒருவன் புதிதாய் பிறக்க முடியாதுதான். எங்கோ பிறந்து இருப்பான்.. என்றோ வருவான்.. உயிரைக் கொடுக்கவா? தான் கொண்டு சென்ற உயிரின்றி உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கவா? பாவம் அந்த நடனப்பாவை..

  ReplyDelete
 8. //கவலை என்னவென்றால்
  காயம் படாமல்
  உன்னை சிறைமீட்க்க
  வழி தேடுகிறேன்..........//

  பெண்மைக்கு எவ்வகையிலும் காயம் கொடுக்காத தங்களின் மென்மை மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே..

  இப்படத்தை ஈகரையில் பதிவு செய்து அனைவரையும் கவிதை எழுதச் சொன்னேன். பலர் எழுதியுள்ளனர். இங்கும் தாங்கள் கவிதையைத் தந்துள்ளீர்கள். அருமை..

  ReplyDelete
 9. சகோ அன்பான அழைப்பு எம் நூறாவது பதிவுக்கு

  http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

  ReplyDelete
 10. படமும் கவி வரிகளும் அருமை

  ReplyDelete
 11. அன்பு சகோ தினேஷ்,
  பதிவுலகில் பல்லாயிரம் பதிவுகளை இட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

  ReplyDelete
 13. பெண்மையை அழகாக கவிதை மூலம் கூறியிருக்கீரீர்கள்.

  Wish You Happy New Year
  நன்றி உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

  http://sakthistudycentre.blogspot.com

  ReplyDelete