Saturday, March 12, 2011

ஏசுவும் என் சீடனே...

http://dl9.glitter-graphics.net/pub/414/414649wfvw09dvvb.gif


பிறந்த போதே
சிலுவையில் அறையப்பட்டேன்
பெண் என்ற காரணத்தல்!


உன் காதல் வெள்ளியின்
கருணை ஒளியால்
உயிர்ப்பு கொண்டேன்!


வரதட்சனை
ஆணிகளால் துளைத்தாய்
எனதுடலை!


இரத்தம் சிந்த
மீண்டும் சிலுவையில்
அறையப் பட்டேன்!


ஏசுவும்
என் சீடன் என்ற
தகுதியையே அடைவான்!


நான் இரண்டாம் முறையும்
சிலுவையில் உயிர்த்தேன்
உயிரோடு உலாவரும்
பிணமாக!




புதுகைத் தென்றல் இதழில் சென்ற ஆண்டு
மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது.
நன்றி புதுகைத் தென்றல்.

11 comments:

  1. படிப்பவர் மனங்களில்லாம் ரத்தம் வடிய ஆணி அடித்து விட்டீர்கள்!

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்,
    சுடச் சுடக் கருத்து சொன்ன அன்புக்கு நன்றி.. என்றோ எழுதியது. புதுகைத் தென்றல் இதழில் சென்ற மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது. இன்றுதான் பதிவிட நேரம் கிடைத்தது.

    ReplyDelete
  3. பெண்களுலகில் முயன்று முன்னேறிவரும் உங்களைப்போன்றோர் எழுச்சிக் கவிதைகள் எழுதி உளுத்துப்போன என்ணங்களுக்கு சமாதி கட்ட வேண்டும். சுய பச்சாதாபக் கவிதைகள் வேண்டாமே.கவிதை அழகாயிருக்கிறது. கருத்துதான்.......

    ReplyDelete
  4. அன்புள்ள G.N.B. தங்கள் கருத்துக்கு நன்றி. நானும் நினைத்தேன். இப்படி ஒரு கவிதையைப் பதிய வேண்டாம் என்று. புதிகைத் தென்றலில் கவிதைக் கேட்டார்கள் சென்ற ஆண்டு. நான்கு கவிதை கொடுத்து அனுப்பினேன். மூன்று எழுச்சிக் கவிதைகள் உட்பட இதையும். இதை மட்டுமே பிரசுரித்துள்ளார்கள். சரி அதை ஏன் வலைப்பூவில் ஏற்றாமல் இருக்க வேண்டும் என்றுதான் பதிவு செய்தேன். இனி எழுச்சிச்களே மலரும் என்னுள்ளும்...மீண்டும் தங்களின் மதிப்பீட்டுக்கு நன்றி..

    ReplyDelete
  5. nice, but I go with G.M.Balu sir's thought

    ReplyDelete
  6. Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

    Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete
  7. வருக நாகசுப்ரமணியன் அவர்களே. முதல் வருகை முதல் அழகான கருத்து இரண்டுக்கும் மனமார்ந்த நன்றி. இனி எழுச்சிக்கு முனைகிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  8. // நான் இரண்டாம் முறையும்
    சிலுவையில் உயிர்த்தேன்
    உயிரோடு உலாவரும்
    பிணமாக! //

    பல பெண்கள் இப்படித்தான் நடைமாடும் பிணமாக ஊரில் உலாவந்துக்கொண்டு...

    கவிதை அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. பார்த்த அனுபவம் பேசுகிறது வாசனிடம். பிணமாக்குவது ஆண்வர்க்கம்தான் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா வாசன்? கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  10. பிணமாக்கி கொள்வது பெண் வர்க்கம் என்று சொல்லுங்கள்.... பிணமாக்குவதற்கு ஆண்வர்க்கம் மட்டும்தான் காரணம் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது... ஏனெனில் நானும் நடைப்பிணமாய்... அதற்கு காரணம் பெண் வர்க்கம் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

    உங்கள் அனுபவத்தில் கண்டிராத உண்மை இருக்காது.... யோசித்து சொல்லுங்கள்... பொதுவான கருத்தை...

    ReplyDelete
  11. மனதின் காயத்தை கவிதையாக்கி
    அதை வலியோடு சொன்ன வரிகள் மனதை....

    தொடருங்கள் தோழியே .உங்கள் கவிதை பயணத்தை.

    ReplyDelete