Tuesday, May 24, 2011

நறுமுகைக்கு ஒரு சிறு வாழ்த்து.


சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
 சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
 வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும்  வெண்கொற்றக் 

குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ த்ந்தை 
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் மெய்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!


அன்புத்  தம்பி அசுரனின் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

9 comments:

  1. சின்ன இடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
    ஆஹா என்ன ஒரு அருமையான வரி சில விடயங்களை அழகாக சொன்னால் அதன் அர்த்தம் கூட அழகாக இருக்கும்

    ReplyDelete
  2. தங்கள் தொடர் பாராட்டில் மனமகிழ்ந்தேன். வருகைக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி யாதவன்.

    ReplyDelete
  3. அன்பான வாழ்த்துகள்.... படித்து நானும் அகம் மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  4. அழகான வரிகள் தோழி ... ரசித்தேன் ....

    ReplyDelete
  5. மிக்க நன்றி வாசன்.

    ReplyDelete
  6. அன்பு தினேஷ்,
    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி தினேஷ்..

    ReplyDelete
  7. நறுமுகைக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி..

    ReplyDelete
  9. adeyappaa அடேயப்பா அசத்திடுறீங்க முல்லை ////// உங்க கவித்திறனுக்கு இல்லை எல்லை ////// வெள்ளை மனதோடு விரி காலை போதிலே எல்லோரின் மனதும் கவி வரிகள் - தமிழ் முகம் தேடி அலை பவருக்கு நின் முகம் அலை மகளாய் , கவி மகளாய், மலை மகளாய் வெளிப்படும், நறுமுகை என் தோழி னென்பதால் என் முகப்பில் அதை பதித்திட்டமைக்கு அனுமதி கோருௐகிறேன் - வெல்லத் தமிழ் பாவில் வெள்ளமென வெல்ல பொ பொழிகின்ற பூந்தமிழே பொலியட்டும் நின் கோட்டம் தமிழாய் அறமாய் மலர்ந்து --- ஆரா

    ReplyDelete