Saturday, August 20, 2011

புறக்கணிப்பு!!!



நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!

தேன்சிந்தும்
என் கன்னத்துச்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!

அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
 பிரித்தெடுத்தேன்
லாவகமாக

இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......

யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!

38 comments:

  1. கவிதையின் உயிர்..

    யார்மீது ஆனையிட்டாய்
    என்னை புறக்கணித்து
    நீ வாழ!

    என்னும் இறுதி அடிகளில் வாழ்கிறது.

    நன்று!

    ReplyDelete
  2. புகையையும் மதுவையும் போல மாதையும் புறக்கணிக்கும் மனிதர் பெண்ணையும் போகப் பொருள் ஆக நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடோ இக்கவிதை.?

    ReplyDelete
  3. மிக்க நன்றி ராஜாபாட்டை ராஜா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. அன்பு வெங்கட் நாகராஜ்,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன்
    நீண்ட நாட்கள் கழித்து நானும் வந்துள்ளேன். என் வலைப்பூவுக்குள் தாங்களும் வந்துள்ளீர்கள்.

    அழகான வாழ்த்துக்கு நன்றி குணா.

    உயிரில்லாத அவளின் கவிதையில் உயிர் உள்ளதா???

    ReplyDelete
  6. அன்புள்ள G.M Balasubramaniam ஐயா,

    //புகையையும் மதுவையும் போல பெண்ணையும் போகப் பொருள் ஆக நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடோ இக்கவிதை.? //

    மிகச்சரியாக கணித்துள்ளீர்கள் ஐயா. அதுமட்டுமல்ல இன்றைய பெண்கள் பெரும்பாலும் இது போன்ற ஆண்களைத் திருத்துகின்றேன் என்று புறப்பட்டு தாங்கள் துரோக வலைக்குள் சிக்கிக் கொள்கின்றார்களே என்ற எண்ணத்தின் வெளிப்பாடும்.

    உடனடியாக வந்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  7. கருத்தாளம் மிக்க கவிதை

    ReplyDelete
  8. அன்பு கவிஅழகன்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஆதிரா,

    கேள்விகளைச் சுமந்து முடியும் எல்லாக் கவிதைகளுமே வாசகனை தன் பக்கம் வசப்படுத்திக் கொண்டு... தன் கேள்விகளை வாசகனை சுமக்கச் செய்துவிடுகிறது.

    //யார்மீது ஆனையிட்டாய்
    என்னை புறக்கணித்து
    நீ வாழ!//

    இந்த வரிகளும் அந்த லாவகத்துடன் தான் இருக்கிறது. ஆனாலும் ஒரு பிழை.

    இறுதியில் இட்டிருக்க வேண்டியது ஆச்சர்யக் குறி அல்ல. கேள்விக்குறி.

    அலையெழுப்பும் அழகிய கவிதை.

    ReplyDelete
  10. இலகுதமிழில் நல்லதொரு கவிதை. சாட்டையடியாக இறுதிவரிகள்

    ReplyDelete
  11. என் கேள்விகளை உங்களைச் சுமக்கச் செய்து விட்டேனா சத்ரியன். அப்போது என் கவிதையிலும் சற்று கணம் இருக்கின்றது என்று எண்ணுகின்றேன்.

    //ஆனாலும் ஒரு பிழை.

    இறுதியில் இட்டிருக்க வேண்டியது ஆச்சர்யக் குறி அல்ல. கேள்விக்குறி.//

    கேள்விக்குறி இட்டு புறக்கணித்து வாழும் அவனைக் கேள்வி கேட்பது கவிதையின் நோக்கம் அல்ல சதிரியன். அவளது அவல உணர்ச்சியின் அடையாளம் அது. அதனால்தான் உணர்ச்சிக்குறி இட்டேன்.

    இன்ப அலையை எழுப்பும் அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  12. வாருங்கள் அம்பலததார் அவர்களே,
    முதன் முறையாக என் குடிலுக்குள் வந்துள்ளீர்கள். நலமா? நீண்ட நாட்கள் ஆகி விட்டன. தங்களுடன் கதைத்து. ஈகரையிலும் தங்களைக் காண இயலவில்லை.

    அழகு தமிழில் அழகிய ஒரு பின்னூட்டம். தங்கள் வருகையில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  13. உணர்வுள்ள கவிதை சகோ..

    ReplyDelete
  14. வாங்க தினேஷ்,
    நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தினேஷ்.

    ReplyDelete
  15. புறக்கணிக்க வேண்டும் என்று அன்பால் விரும்பிய நெஞ்சங்கள் யாரும் விரும்புவதில்லை... அது அவர்களின் சூழ்நிலை சந்தர்பத்தை சார்ந்து அமைந்திருக்ககூடும். விளக்கம் சொல்லமுடியாத நிலையாக இருக்ககூடும்...

    ReplyDelete
  16. அன்பு வாசன்,
    என்ன எழுதி அதை எனக்குத் தெரியக்கூடாது என்று அழித்துள்ளீர்கள்.

    //புறக்கணிக்க வேண்டும் என்று அன்பால் விரும்பிய நெஞ்சங்கள் யாரும் விரும்புவதில்லை... அது அவர்களின் சூழ்நிலை சந்தர்பத்தை சார்ந்து அமைந்திருக்ககூடும். விளக்கம் சொல்லமுடியாத நிலையாக இருக்ககூடும்... //

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். நன்றி வாசன்.

    ReplyDelete
  17. உங்களுக்கு தெரியக்கூடாது என்று எனக்குள்ளும் எதுவும் இல்லை...

    மிக்க நன்றி.... என்னுடைய வரிகளையும் சரியென்று ஏற்றுக்கொண்டமைக்கு...

    ReplyDelete
  18. மிக அருமையான எளிமையான கவிதை.வாழ்த்துகள்...
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  19. நன்றி வாசன். சரியான வரிகளை சரி என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  20. அன்பு வேதா,
    முதல் வருகைக்கு நன்றி. தங்களின் வருகையில் என் குடில் மகிழ்கிறது. அழகான க்ருத்துக்கு நன்றி. இலங்காதிலகம் என்பது வானொலியா? எனக்கு விபரம் சொல்லுங்க வேதா. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  21. புறக்கணிப்பிற்கு
    ஓர் அழகிய விளக்கம்,,,,
    இலக்கணமாய்.....

    ReplyDelete
  22. அன்பு மகேந்திரன்,
    இங்கும் அங்கும் வருகை புரிந்துள்ளீர்கள். வருக! வருக! இனிய வரவேற்புகள்.
    அழகிய நட்புக்கு நன்றி. தங்கள் வரவில் மகிழ்ந்து.. மீண்டும் எதிர்நோக்கி.. அன்புடன்...

    ReplyDelete
  23. உணர்வுள்ள கவிதை

    ReplyDelete
  24. ஆதிரா said...
    நல்ல பாடம்தான். ஆனால் ஃபாலோயரை ஏன் நீக்க வேண்டும். அவர்களால் பதிவர்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்குமா? தெரியப்படுத்தவும்.//

    பதிவுலகில் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.. நான் அவர்களை நீக்குவது பற்றி சொல்லிவில்லைங்க.. யாராவது இல்லீகல் பிகசர் புரஃபைலுடன் வந்து ஃபாலோயராக வந்து சேர்ந்தால்.... அதை நீக்குவதை தான் அப்படி மறைமுகமாக அந்த பதிவில் சொல்லியிருந்தேன்...

    ReplyDelete
  25. அருமை... அவனை மாற்றிய அவளையை மாற்றி மறந்துவிட்டான் அவன் .... கவிதை நல்லாருக்குங்க...

    ReplyDelete
  26. தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. வாங்க மாலதி.
    முதல் வருகை.. மகிழ்ச்சியாக உள்ளது, இனிய வரவேற்புகள் மாலதி. மிக்க நன்றி

    ReplyDelete
  30. ம்க்க நன்றி ராஜேஷ். த்ங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  31. அன்பு ரெவரி,
    முதல் வருகை... என் வலைக்குடிலுக்குத் தங்களை அன்போடு வரவேற்கிறேன்.
    முதல் வருகையே வாழ்த்தோடு தொடங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  32. ரெவரி என்ன க்விதையைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. ஏன்?

    ReplyDelete
  33. அன்பு தமிழ்த்தோட்டம் யூஜின்,
    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. புறக்கணிப்பின் வலியை புரிய வைக்கும் வரிகள் .
    அருமை மேடம்

    ReplyDelete
  35. உங்கள் புறகணிப்பு
    சில கவனிப்போடு
    காதல் பயணம்...

    ஈர்க்கும் வரிகள்
    ஆதிராவுக்கு மட்டுமே
    சொந்தம்...

    சோகத்தை கூட
    சுகமாய் சொல்லும்
    வரிகள் ,,,
    தேரோட்டம் தொடரட்டும்
    பாராட்டுக்கள் .

    ReplyDelete