Monday, May 28, 2012

ஏமாற்றிச் சென்றது ஏன் ஆண்மழையே


சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்துக்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றிச் சென்றது ஏன்
ஆண்மழையே
நீயும் என் காதலனாய்




15 comments:

  1. சில
    மழைகள் அப்பிடித்தான்
    சில தருணங்களில்
    ஏமாற்றும் ...ம்(:

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். சில மழைகள் அப்படித்தன்...
      கருத்துக்கு நன்றி.

      Delete
  2. ரசிக்க வைத்தது ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்;.. முதல் வருகை. வருக: வருக.. தங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா?
      வருகை வாழ்த்து இரண்டும் மகிழ்வாக... நன்றி

      Delete
  3. ரசிக்க செய்தது!

    கூடவே-
    ஏங்க செய்தது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனி,
      வெய்யில் காலத்தில் இந்த ஏக்கம் எல்லோருக்கும் உரியதுதான். கோடையில் ஒரு மழைகூட வரவில்லை.

      ரசித்தமைக்கு மிக்க நன்றி சீனி

      Delete
  4. மழையில் ஆண்மழை என்ன, பெண்மழை என்ன.? ஏமாற்றும் குணம் எல்லோருக்கும் உண்டு, பொது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா. இதுதான் உண்மையான் விமர்சனம் என்பது.
      மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      Delete
  5. வணக்கம் சகோதரி
    நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தங்கள் தளம் வந்து
    நலம் தானே...

    காலம் முழுதும் நானிருப்பேன்
    கலங்காதே கண்மணியே
    என்று சொல்லிவிட்டு
    ஏமாற்றும் காதல் சித்தர்களை
    அருமையாய் வடித்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மகேந்திரன். நான் நலம். நீங்கள் நலமா? நம் வலைத்தள நண்பர்கள் அனைவரும் நலம்தானே? நானும் என் தளம் வந்து நீண்ட நாட்கள் ஆயிற்று. பணிச்சுமை. நேரமின்மை.

      ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதைத் தவிர சொல்ல என்ன இருக்கிறது. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்..,,ஏமாற்று...

      Delete
  6. அட!

    இங்க பாருங்கப்பா மழையினில் கூட ஆண் , பெண் இருக்காமே!

    அருமை ஆதிரா.

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் நன்றி. பின்னால் பாருங்க ஒருத்தர் பாவம் நொந்து புலம்புவதை.

      Delete
  7. Replies
    1. இப்படிக்கு பெண்மழையில் நனைந்து நொந்த கூட்டம்.

      Delete
    2. வாங்க ஆண் மழையே(அப்பாதுரையே), பியூட்டிஃபுல் என்று பதிவு போட்டு விட்டு அப்பரம் என்ன அங்க புலம்பல்(அலம்பல்)?

      நன்றி அப்பாதுரை.. மனம் நொ(நை)
      ந்தபோதுதானே இந்த வேறுபாடெல்லாம் தெரிகிறது....

      Delete