ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, September 1, 2012

அவள் நீயாகி விடுகிறாள்!
முதன் முதலில்
உன் கையில் இருந்து
வாங்கிய புத்தகம்

என் வீட்டு சோபாவில்....

புத்தகத்தின்
அட்டையில்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
ஒரு நடிகை!

என்ன அதிசயம்

நான் பார்க்கும் போதெல்லாம்
சிரித்துக் கொண்டிருக்கும்
அவள்
நீயாகி விடுகிறாள்!
 


9 comments:

 1. ம்ம்ம் எங்கெங்கு காணினும் அவள் முகமே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete
 2. அற்புதம்.......\ரசிக்கும் கற்பனை

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிட்டுக்குருவை

   Delete
 3. //என்ன அதிசயம்
  நான் பார்க்கும் போதெல்லாம்
  சிரித்துக் கொண்டிருக்கும்
  அவள்
  நீயாகி விடுகிறாள்!//

  அட... இது நல்லா இருக்கே...

  எங்கெங்கு காணினும் அவள் முகம்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் வெங்கட் நாகராஜ். பார்க்கும் இடத்திலெல்லாம் உந்தன் பச்சை நிறம் என்பதைப் போல.... நன்றி

   Delete
 4. எங்கெங்கும் அவள் முகம்..
  அங்கெல்லாம் என் மனம்,
  ஏந்திழை அவள் உடல் தங்கம்
  அவள் இயலிசை நாடக சங்கம்.. ன்னு ஒரு பாட்டு இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. எத்தனை ஆனந்தக் கிளர்ச்சி..

   என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி...


   அத்தனை தேவதைக் கவர்ச்சி...

   அவள் அசைவது தாமரை மலர்ச்சி...

   ஆம் அழகிய பாடல் இது தொடர்ச்சி. நன்றி ஜி

   Delete
 5. அருமையாய் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.தொடருங்கள்.

  என்னுடைய தளத்தில்

  தன்னம்பிக்கை -3

  தன்னம்பிக்கை -2

  ReplyDelete