கடின வேலைகள்
எதுவும் தராமல்
மிருதுவாக வைத்திருந்தேன்
உள்ளங்கைகளை
உன் தளிர் மேனியை
தழுவி வருடுவதற்காக
இதழ்களைக்
குவித்துக்
காத்திருந்தேன்
ஒற்றைப் பதிவில்
உன்மத்தமாகும்
உன் பட்டுக்கன்னத்தில்
ஒற்றுவதற்காக!
கருவரைச் சுவர்களைக்
கால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்
உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக
குருதிக் கரைசலில்
உறுதி தீபமேற்றி
காத்திருந்தேன்
ஆலத்திச் சுற்றி
உன்னை வரவேற்பதற்காக
காத்திருப்புகளின்
கால நீட்டிப்பு
காலாவதியாகிப்
போனதைக்
காட்டி முடிந்த
என் கார்காலம்
கண்களில் மட்டும்
தொடர்ந்தபடி...
mmm....
ReplyDeleteengo sentru...
engeyo mudiththuvitteerkal...
arumai!
புரியவில்லை சீனி.
Deleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Delete
ReplyDeleteகவிதைகள் எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் மனதில் இருப்பதை abstract form ல் பதிவு செய்து விடுகிறார்கள். புரிதல் கடினமானதாய் போய் விடுகிறது.புரியவில்லை என்று சொல்லவும் படிப்பவர்கள் தயங்கு கிறார்கள்.( எங்கே குறைவாக மதிப்பிடுவார்களோ என்ற எண்ணத்தில் )நான் மனதில் பட்டதைக் கூறிவிட்டேன். கவிதையை விமரிசிக்கவில்லை. என் அறியாமையை வெளிப்படுத்தினேன். வாழ்த்துக்கள்.
ஜி.எம். பி.ஐயா நிஜமாகவே உங்களுக்கு இந்தக் கவிதை பொருள் புரியவில்லையா?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகருவரைச் சுவர்களைக்
ReplyDeleteகால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்
உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக///
காத்திருப்புகளின்
கால நீட்டிப்பு
காலாவதியாகிப்
போனதைக்
காட்டி முடிந்த
என் கார்காலம்
கண்களில் மட்டும்
தொடர்ந்தபடி...!!!
என்ன ஒரு ஏக்கம் !...தாய்மையின் மகத்துவத்தை
சிறப்பான கவிதை வரிகளால் தீட்டி அதில் எதிர்பார்ப்பையும்
விளைந்த ஏமாற்றத்தின் வலிகளையும் நெஞ்சைத் தொடும்படி
எழுதிய விதம் உண்மையில் கண்களைக் கலங்க வைத்தது
சகோதரி :( வாழ்த்துக்கள் சிறப்பான கவிதைகள் மேலும்
தொடரட்டும் ......
மிக்க் நன்றி அம்பாளடியாள்
Deleteகாத்திருப்புகளின்
ReplyDeleteகால நீட்டிப்பு
காலாவதியாகிப்
போனதைக்
காட்டி முடிந்த
என் கார்காலம்
தாய்மையின் ஏக்கம் மனதை தீண்டும் சலனம்
வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது தமிழ் செல்வி அவர்களே.
Delete