Friday, July 26, 2013

இரங்கல் கூட்டம்



பால் , எறும்பு
இரண்டுக்குமான பாதுகாப்பாய்
லஷ்மண்ரேகா, மஞ்சள்தூள்
எல்லாவற்றாலும்
எவ்வளவுதான்
பாதுகாப்பு வளையம்
போட்டு வைத்தாலும்

வியூகங்களையெல்லாம்
தகர்த்து எரிந்து விட்டு
வேலி தாண்டி
பால்(ழ்) கிணற்றில்
பாய்ந்து
தற்கொலை செய்து கொள்கின்ற
எறும்புகளுக்காக
தினமும் நடத்துகிறேன்
இரங்கல் கூட்டத்தை...

உழைப்பை,
விடா முயற்சியை,
சுறுசுறுப்பை
போதித்த
எறும்புகளிலும்
கோழைகள் உண்டென..!


10 comments:


  1. தற்கொலை செய்யத் தூண்டுபவருக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு தெரியுமா.?

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam சார்,
      நான் தான் மஞ்சள், லஷ்மண்ரேகா எல்லாம் போட்டு பாது காக்கிறேன். அதையும் தாண்டி போய் பாலில் விழுந்து உயிர் விட்டால் நான் என்ன செய்வது.

      நீங்கள் என்னைக் குற்றவாளி ஆக்க முயல்கிறீர்கள்.
      இதெல்லாம் ரொம்ப மோசம் சார். ஹ ஹா

      Delete
  2. வித்தியாசமான சிந்தனை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் அவர்களே

      Delete
  3. வித்தியாசமான சிந்தனை......

    படம் பார்த்து கவிதை எழுதினீங்களா.... இல்லை கவிதைக்காக எடுத்து போட்ட படமா?

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்காகத்தான் படம் தேடினேன். படம் நல்லா அமையல.

      Delete

  4. பாலைத்தானே காக்கிறீர்கள்....! ( all in lighter vein)

    ReplyDelete
    Replies
    1. ஜி.என்.பி. சார்..
      விடமாட்டீர்கள் போல.. ஹா ஹா
      கிணற்றைக் கம்பி போட்டு மூடி வைத்தால் உள்ளே மக்கள் விழ மாட்டார்கள்.. அது போல.. நானும் காக்கிறேன் பாலுடன் உயிரையும்

      Delete