Wednesday, September 25, 2013

அலமாரி பொம்மைகள்



விழிகளில்
ஏக்கப் பூக்களை ஏந்தி
முதியோர் இல்லங்களில்
காத்திருக்கும்
பெற்றோர்களைப் போல…

ஏக்கத்துடன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டே
இருக்கின்றன..

வளர்ந்த குழந்தைகளின்
ஸ்பரிசத்திற்காக

அலமாரியில்
ஒதுக்கப் பட்ட
அவர்கள் விளையாடிய
பொம்மைகள்

9 comments:

  1. பல தடவை இந்த பொம்மைகளைப் பார்த்து பரிதாபம் மனதில் வந்திருக்கிறது. உங்களுக்கு கவிதையாக வந்திருக்கிறது! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  2. மிக்க நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

  3. பெற்றோர்களே பொம்மைகளாகி விட்டனரோ....

    ReplyDelete
    Replies
    1. ஓஓ அப்படியும் இருக்கலாமோ ஜி. எம்.பா. ஐயா. இது எனக்குத் தெரியலையே

      Delete
  4. வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விக்னேசுவரி

      Delete
  5. முதியோருக்கும், அலமாரி பொம்மைகளுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் கவிதை.. சொல்வதெல்லாம் ஒன்றே... "ஏக்கம்" பொம்மைகளைவிட உயிர்பொம்மைகளாக முதியோர்கள் போற்றத்தக்கவர்கள்..

    கவிதை அருமை.. அழகான வார்த்தைகள்...!!

    பகிர்வினிற்கு மிக்க நன்றி..

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
  6. பொம்மைகளைப் பேசிய கவிதை உணர்வுகளையும் கிளறி மனதை கனக்கச் செய்தது; ரசிக்கவும் செய்தது.

    ReplyDelete