பாரதியின் மீசைக்கு
கால்கள் முளைத்தன
ஓர் இரவில்
இரவினிடையில்
அவை
மெல்ல நடந்து
உறங்கிக் கொண்டிருந்த
மோனாலிசாவின்
விழிகளுக்கு மேல்
பள்ளி கொண்டன
புருவமற்ற்
ஏக்கத்தில்
புன்னகையைத் தொலைத்த
அந்தப் பேரழகியின்
உதடுகளில்
ஒட்டிக்கொண்டது
பேராண்மையும்
பெண்ணுக்குள்
வீரத்தை வைத்த
ஆனந்தத்தில்
ஒளிர்கின்றது
மீசையற்ற
அந்த
அசகாய சூரனின் முகம்
இன்னும்
கம்பீரமாக!
அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார்
Deleteஅருமை! வித்தியாசமான சிந்தனை! அழகு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ் அவர்களே
Deleteவித்தியாசமான உங்கள் சிந்தனை மிக அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteபாரதியின் மீசைக்கு
ReplyDeleteஎத்தனை சக்தியம்மா
பாரதியின் கவிதைக்கு
எத்தனை வலிமையம்மா
அத்தனையும்
நினைவில் வருகிறதே!
அவனை நினைத்தாலே பொங்கியெழும் பலவகையான உணர்வுகளும்.
Deleteநன்றி ஜீவலிங்கம் காசிலிங்கம் சார்
பாரதியின் கவிதை மட்டுமா... அவரைப் பற்றி யார் கவிதை எழுதினாலும் உணர்வுகள் பிரவாகமாகப் பொங்கி அருமையாய் அமைந்து விடுகிறது. இந்தக் கவி¬துயும் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டது. சூப்பர்!
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் தங்களின் கவிதைகள் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நேரமிருப்பின் பார்வையிடவும்.
http://www.blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html
என் வலைத்தளத்தில் உங்களை நாற்காலி போட்டு அமர வைக்க நினைத்தேன். என் கவிதை உங்கள் உள்ளத்தில் அமர்ந்தது நான் செய்த பேறு. சிலாகித்துப் பாராட்டியமைக்கு நன்றி
ReplyDeleteவலைச்சரம் வந்து பார்த்தேன். எவ்வளவு அழகான நடை. திரும்பத் திரும்ப நான்கு முறை படித்தேன். புரியாமல் அல்ல. பிடித்ததால்...
நகைச்சுவையிலும் சரி (சரிதாயனம் படித்ததால் சொல்கிறேன்) இது போன்ற நடையிலும் சரி உங்கள அடிச்சுக்கவே முடியாது.
என்னையும் அங்கு அறிமுகம் படுத்தியுள்ளீர்கள். எல்லாத்துக்கும் நன்றி கணேஷ்.
பாரதியின் மீசைக்கும் இப்படி அதிசயமுண்டோ?
ReplyDeleteஎன்னவோ அப்படித் தோன்றியது கவியாழி.
Delete