இந்த நொடியின்
என் மனநிலை
எங்கோ ஒரு தோழனுக்கோ தோழிக்கோ
இருக்கக் கூடும்
அழும் குழந்தையின் வாயில்
நெகிழியைச் சொறுகிவிட்டு
கடமையை ஆற்றும் தாயாக
அவர்களும்
ஏதோ ஒரு செயலை ஆற்றக் கூடும்
சிந்தையும் கரங்களும் இணையாமல்
ஆற்றும் பணியில்
அவர்களும் என்னைப் போலவே
தோல்வியும் அடையக் கூடும்
அவர்களுக்காகவும் திறந்து வைக்கிறேன்
என் ஜன்னல்களை…
தென்றல் என்றாவது நுழையட்டும் என்று…
அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
Deleteஇன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :
ReplyDelete4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html
நன்றி...
தனபாலன் சார். உடனடியாக ஓடோடி வந்து படித்தேன். ஆனால் என் சிற்றறிவுக்குச் சில செய்திகளைச் செய்ய இயலவில்லை. மேலும் மெனக்கெட நேரம் இல்லை. ஒரு ஓய்வான நாளில் மீண்டும் வந்து எல்லாவற்றையும் செயல்படுத்துவேன்.
Deleteஅருமையான பயனுள்ள பதிவுக்கும் நினைவூட்டி அழைத்தமைக்கும் நன்றி தனபாலன் சார்.
தங்கள் பதிவை வரவேற்கிறேன்.
ReplyDeleteநன்றி ஜீவா சார்.
Deleteசிந்தையும் கரங்களும் இணையாமல் ஆற்றும் பணி துரதிர்ஷ்டமானதுதான். ஒருங்கிணைந்து செயல் பட முயலுதல் அவசியம்/ மாறாக கூடிச் சேர்ந்து புலம்ப கதவுகளைத் திறந்து விடல் நியாயமா. சொல்லுங்கள். எழுத்து நன்றாக இருந்தாலும் கருத்து உடன்பாடில்லை . பொறுக்கவும்
ReplyDeleteஜி.எம். சார் இப்படி நீங்கள் கேட்டால்தான் நியாயம். மகிழ்ச்சியாக.
Deleteஆனால் கதவைத் திறந்து வைத்தது கூடிப் புலம்ப இல்லை. இன்னொரு முறை படிங்க சார்.
கருத்து உடன்பாடில்லை. சரி. அதெற்கு எதற்கு நான் பொறுக்க வேண்டும். ஹா ஹா ஹா (இது சும்மா விளையாட்டுக்கு...)
எப்போதும் என்னைச் சிந்திக்க வைக்கும் பின்னூட்டம் உங்களுடையது சார். நன்றிகளுடன்
மிக அருமை.... பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே
Delete